|
![]() "பி12" விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இறைச்சி, மீன், பால் போன்றவற்றில் இந்த விட்டமின் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளிலும் போதிய அளவில் விட்டமின் இருப்பதாக கூற முடியாது. ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே போதிய விட்டமின் சத்துக்கள் உள்ளன. "பி12" விட்டமின் பற்றாக்குறையால் ரத்த சோகை, அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு மூளை சுருக்கம் ஏற்படுகிறது. 61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 பேரிடம் நினைவு, உளவியல் பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், அவர்களது மூளையை "ஸ்கேன்" செய்ததன் மூலமும் இந்த விவரம் தெரியவந்தது. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment