|
|
![]() ![]() பொதுவாக, புற்றுநோய் யாருக்கு அதிகமாக வருகிறது? அவர்கள் செய்யும் வேலையென்ன? என்பதை ஆய்வு செய்ய ஜப்பான் சுகாதார அமைச்சகம் முனைந்தது. அமர்ந்து கொண்டே வேலைசெய்பவர்களை விட, ஓடியாடி வேலை செய்பவர்கள் தான் குறைவாக புற்றுநோய் பெறுபவர்களாக இருக்கிறனர் என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட ஓடியாடி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களில் முறையே 13, 16 விழுக்காட்டினர் புற்றுநோய் பெறும் சாத்தியக்கூறுகள் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. |
|
அமெரிக்க நோய் விபரவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள்படி, ஆய்வாளர்கள் ஜப்பானின் 9 மாநிலங்களில் வாழ்கின்ற 45 முதல் 74 வயது வரையான எண்பதாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு செய்தனர். அமர்ந்தே இருப்பது, நடப்பது, நிற்பது, உறங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்கள் நாள் முழுவதும் செய்கின்ற ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கண்காணித்தனர். ஓய்வு அல்லது கட்டுக்கோப்பான உடல் பெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் வேலைகளை உள்ளடக்கி ஜப்பானில் முதல்முறையாக இந்த ஆய்வை செய்துள்ளனர். இதன் மூலம் ஓடியாடி வேலை செய்யும் அல்லது ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடும் ஜப்பானிய பெண்களிடத்தில் புற்றுநோய் ஏற்படும் விழுக்காடு குறிப்பிடதக்க அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது |







No comments:
Post a Comment