![]() | ![]() |
| |
![]() ![]() இங்கு நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். நாடு முழுவதும் வாழும் ராஜஸ்தான் மக்கள் குடும்பத்தோடு வந்து இந்த விழாவில் கலந்து கொள்வது வழக்கம். நவராத்திரியின் முதல் நாள் இன்று தொடங்கியதை அடுத்து ஜாமுண்டா தேவி கோவிலில் நேற்று இரவு சிறப்பு திருவிழா நடந்தது. இதில் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டனர். விடிய, விடிய திரு விழா நடந்தது. இன்று அதிகாலை5.30 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவில் உள் வளாகத்துக்குள் சென்றனர். அந்த பாதை குறுகியதாக இருந்தது. முன் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர். இதன் நுழைவு வாயில் பகுதியில் மதில் சுவர் உள்ளது. அதை உரசி தள்ளிபடி பக்தர்கள் சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதை பார்த்த சிலர் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி விட்டனர். இதனால் இன்னும் பீதி அதிகரித்தது. அந்த இடத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு நெரிசலில் இருந்து தப்பிக்க முயன்றனர். இதனால் நெரிசல் மேலும் அதிகமாகியது. ஏராள மான பெண்களும், குழந்தைகளும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவர் களும் நெரிசலில் சிக்கி கொண்டனர். இதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடினார்கள். கீழே விழுந்தவர்கள் மிதி பட்டே செத்தனர். பலர் மூச்சுத் திணறி கீழே சாய்ந்தனர். அவர்களும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த இடத்திலேயே பலியானார் கள். 250 பேர் காயம் அடைந்தனர். அங்கு ஒரே கூச்சலும் மரண ஓல முமாக இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அலறி யடித்து அங்கும் இங்கும் ஓடி னார்கள். 15 நிமிடத்துக்கு பிறகு நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிலைமை சீரானது. உடனே போலீசாரும் பொதுமக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஜோத்பூரில் உள்ள மது ராதாஸ் ஆஸ்பத்திரி, மகாத்மா காந்தி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சேர்க்கப் பட்டனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலும், சிகிச்சை பலன்னிறியும் மேலும் பலர் செத்தனர். இத்துடன் சாவு எண்ணிக்கை 170 ஆனது. சிகிச்சை பெறுப வர் களில் 26 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், மருத்துவ குழுக்களும் விரைந் தனர். முதல்-மந்திரி வசந்தராஜே சிந்தியாவும் அங்கு விரைந்தார். மாநில உள்துறை மந்திரி குலாப்சர்த் கதாரியா கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு குறைபாடுகள் தான் நெரிசலுக்கு காரணமா என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர் "போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது'' என்றார். விபத்து ஏற்பட்டது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவிலில் ஏற்பட்ட நெரிசலுக்கு கோவில் சுவர் இடிந்தது தான் காரணம் என்று ஒரு தகவல் தெரிவித்தது. ஆனால் பக்தர்கள் சிலர் கூறும்போது, "கோவிலில் வெடி குண்டு இருப்பதாக புரளி ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பயந்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது'' என்றனர். மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட தாக புரளி கிளம்பியதாகவும் சில பக்தர்கள் கூறினார்கள். மலைப்பாதையில் சென்ற போது சிலர் தவறி கீழே விழுந்ததாகவும் இதனால் தான் நெரிசல் ஏற்பட்டதாகவும் இன் னொரு தகவல் தெரிவிக் கிறது. இந்தியாவில் கோவில் கூட்டங்களில் இதேபோல அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகின்றன. மராட்டிய மாநிலத்தில் உள்ள கோவிலில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெரிசல் ஏற்பட்டு 265 பக்தர்கள் பலியானார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி மலைக் கோவிலில் நெரிசல் ஏற்பட்டு 130 பேர் பலியானார்கள். கடந்த ஜுலை மாதம் ஒரிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள். நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்களில் பலர் உடலில் எந்த காயமும் இல்லை. அவர்கள் மூச்சு திணறியே இறந்திருப்பது தெரிந்தது.பலியானவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிகம் பேர் இருந்தனர். |
No comments:
Post a Comment