பண்ருட்டி: பண்ருட்டியில் மணமகளுக்கும், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணமகனுக்கும் செல்போனிலேயே திங்கள்கிழமை திருமணம் நடந்தது.
பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மகன் முகமது யாசின் (21), அபுபக்கர் மகன் ஷாஜகான் (37).
ஷாஜகான் வீட்டில் குடியிருக்கும் அப்துல் அஜீஸ் மகள் நிலோபர் நிஷாவுக்கும், சுலைமான் மகன் முகமது யாசினுக்கும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு 12.6.2008ல் நிச்சயம் செய்யப்பட்டது. 23.6.2008-ல் திருமணம் நடத்த தேதி குறித்தனர்.
இதை அறிந்த ஷாஜகான், நிலாபர் நிஷாவை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் இருவருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் கத்தியால் முகமது யாசினை குத்தினார்.
இதில் காயம் அடைந்த முகமது யாசின் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் 23.6.2008 அன்று பண்ருட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துவா ஓத, அதை புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணமகன் முகமதுயாசின் செல்போன் மூலம் கேட்டவாறு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment