Wednesday, April 28, 2010

இஸ்லாத்தை ஏற்ற அய்யம்பேட்டையை சேர்ந்த சகோதரிகள்

 
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!குர்ஆனை படித்து இஸ்லாத்தை ஏற்ற அய்யம்பேட்டையை சேர்ந்த நான்கு சகோதரிகள்!இஸ்லாத்தை பின் பற்ற ஊர் காரர்கள் தடை! TNTJ தலைமையகத்திற்கு வந்த நான்கு சகோதரிகள்!சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த TNTJ.நான்கு சகோதரிகளின் பேட்டி:பத்திரிக்கையில் வெளியான செய்தி:தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகில் உள்ள பசுபதி கோவில் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு நான்கு மகள்கள். இவர்களில் லோகேஸ் வரி என்பவர் குடும்பச் சூழ்நிலை கார ணமாக அருகில் உள்ள சக்ராபள்ளி ரெஜியா கிளினிக்கில் 5 வருடங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.அங்கு அவரின் திறமையால் டாக்டரின் நம்பிக்கைக்குரிய ஊழியர் ஆனார். இதற்கிடையில் தனது தங்கைகள் ஷர்மிளா மற்றும் அம்பிகாவையும் அங்கு வேலைக்குச் சேர்த்தார். சக்கராப் பள்ளியில் உள்ள சிலர் ரெஜியா கிளினிக்கிற்கு வருகை தரும்போது - லோகேஸ்வரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்றைத் தந்துள்ளார்கள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருக்குர்ஆன் தமிழாக்கம் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட லோகேஸ்வரியின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஓரிறைக் கொள்கையில் உறுதிகொண்டு, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் இஸ்லாத்தை ஏற்ற அந்தச் சகோதரி - இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக அமைத்துக் கொண்டாலும், பிறருக்குத் தெரியாமல் தனது தங்கைகளுக்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அவர்களும் இஸ்லாத்தை அறிந்து, தங்களின் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். இது குறித்து இவர்களின் உறவினர்களுக்குத் தெரியவந்த போது அதைக் கண்டித்து அவர்களை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார்கள். அடிகளையும், துன்புறுத்தல்களையும் வாங்கிய போதும், அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டும், இஸ்லாத்தை விட்டுவிடாமல் அதைத் தீவிரமாக பின்பற்ற ஆரம்பித்தனர். அதற்குக் காரணம் அவர்கள் மதமாற்றம் அடையவில்லை - மனமாற்றம் அடைந்தது தான்.இதற்கிடையே, இவர்களில் மூத்தவராகிய லோகேஸ்வரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளது. இதைக் கண்ட சகோதரிகள் மூன்று பேரும், இதனால் தாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்று எண்ணி, டிஎன்டிஜே மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, (தாங்கள் தினமும் பார்க்கும் வின் தொலைக்காட்சி மூலம் பாக்கர் அவர்களின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது.) ''எங்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வியைப் படிக்க ஆர்வமாக இருக்கிறது. எங்களை உங்களது அழைப்பு மையத்தில் சேர்த்துக் கொள்வீர்களா?'' என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவரும் (பாக்கரும்) டிஎன்டிஜே அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்­யுள்ளார். இதன் காரணமாக கடந்த 6-11-07 அன்று இந்தச் சகோதரிகள் காலையில் வீட்டி­ருந்து மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையே சென்னைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இஸ்லாமியர்களைப் பார்த்து இஸ்லாத்தின் மீது பற்றுகொண்ட மகா­புரத்தைச் சேர்ந்த மற்றொரு சகோதரியான கலைச் செல்வி என்பவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். நால்வரும் அன்று மாலையே சென்னைக்குப் புறப்பட்டு விட்டனர். சென்னைக்குச் செல்லும் வழியிலே தங்களது உறவினர்களுக்கு நாங்கள் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால், அதன் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்காக சென்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் செல்கிறோம். அங்கு சகோதரர் பாக்கர் அவர்களைச் சந்திக்க இருக்கின்றோம் என்ற தகவலையும் உறவினர்களுக்குக் தெரிவித்துள்ளனர்.இதனால் உடனடியாக டிஎன்டிஜேவின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கரை உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு பாக்கர் அவர்கள், ''எங்ளது அலுவலகத்திற்கு வாருங்கள். அந் தப் பெண்களை சந்தித்துப் பேசுங்கள். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம்'' என்று கூறியுள்ளார்.மறுநாள் டிஎன்டிஜே தலைமை அலுவலகத்திற்கு வந்த லோகேஸ்வரி மற்றும் கலைச் செல்வியின் உறவினர்கள், பாக்கரை அணுகி தங்கள் மக்களை ஒப்படைக்குமாறு கோரினர். அதற்கு பாக்கர், ''எங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்துள்ளனர். நான்கு பேரும் மேஜர். எனவே அவர்கள் என்ன தீர்மானிக்கிறார்களோ அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம். அவர்களிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுடன் வருவதாகக் கூறினால், தாராளமாக அவர்களை அழைத்துச் செல்லுங்கள்'' என்று கூறி அந்நால்வரையும் வந்திருந்த பெற்றோர்களிடம் ஒப்டைத்தார்.சுமார் 3 மணி நேர பாசப் போராட்டத் தின் முடிவில், நான்கு சகோதரிகளின் பிடிவாதமே வென்றது. ''நாங்கள் தவறான வழிக்குச் செல்லவில்லை. ஏக இறைவனின் தூய மார்க்கத்தில் உள்ளோம். நீங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறியதும், வந்தவர்கள் ''இவர்கள் எங்களை மதிக்கவில்லை. இனிமேல் நாங்கள் இவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டோம். இவர்கள் உங்களிடம் உள்ளதற்கு எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு கடிதம் தரவேண்டும்'' என்று கேட்டதற்கு மாநிலச் செயலாளர் தவ்ஃபீக் கையெழுத்திட்ட கடிதத்தை அவர்களிடம் வழங்கினார்.கடிதத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்குச் சென்ற உறவினர்கள் மறுநாள் (9-11-07) அய்யம்பேட்டை காவல்நிலையத்தை அணுகி, தங்கள் மகள்களை மதம் மாற்றுவதற்காக அழைத்துச் செல்லப் பட்டிருப்பதாகவும், நாங்கள் சென்று கேட்டதற்கு அனுப்ப மறுத்துவிட்டதாகவும், மீட்டுத் தரும்படியும் புகார் அளித்துள்ளனர்.புகாரைப் பதிவு செய்த காவல்துறையும், 10-11-07 அன்று டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு ஆய்வாளர் மோகன் அவர்கள் தலைமையில் வருகை தந்து, பெண்களை ஒப்படைக்குமாறு கேட்டனர். அதற்கு இப்பொழுது நேரமாகிவிட்டதால், காலை வாருங்கள். நாங்கள் பெண்களை அழைத்து வருகிறோம் என டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் கூறினர்.அதன்படி 11-11-07 காலை 10 மணிக்கு காவல்துறையினர், அப்பெண்களின் உறவினர்களுடன் டிஎன்டிஜே தலைமையகத்திற்கு வந்துள்ளனர். பெண்களின் உறவினர்கள் காலை 10 மணி முதல் மதி யம் 3 மணி வரை நான்கு பெண்களிடமும் பல்வேறு விதமாகப் பேசியும், மிரட்டியும், கெஞ்சியும் எந்தப் பயனும் இல்லை. ''நாங்கள் தெளிவாக ஆய்வு செய்து, புரிந்து கொண்டுதான் இஸ்லாத்திற்கு வந்துள்ளோம். யாரும் எங்களை நிர்ப்பந்திக்க வில்லை. நாங்கள் எங்கள் முடிவில் தெளிவாக உள்ளோம்'' என்று அந்நால்வரும் உறுதிபடக் கூறிவிட்டனர்.இதனையடுத்து விசாரணைக்கு வந்த காவல்துறையினர், தங்களின் விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். மேலும், காவல்துறையினர் டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் ''இவர்கள் இங்கு வந்துவிட்டதால் அங்கு கலவரம் ஏதும் ஏற்படக்கூடும். எனவே இவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் மூலமாக இவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள்'' என்று கோரிக்கை வைத்தனர்.காவல்துறையின் இந்த கோரிக்கையை ஏற்று இவர்கள் நான்கு பேரையும் உயர்நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான ஏற்பாடுகளை TNTJ செய்யத் தொடங்கியது12-11-2007 அன்று நான்கு சகோதரரிகளும் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில், ''தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி'' ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்தனர்.13-11-2007 அவர்களின் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டதால் இந்த நான்கு சகோதரிகளும் சென்னை மாவட்ட காவல் துனை ஆணையர் அலுவவலத்திற்கு சென்று பாதுகாப்பு கோரி மனு வழங்கினர்.மேலும் உயிருக்கும் உடமைக்கு பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றதிலும் இந்த நான்கு சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்இந்த செய்தி தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியாக தொடங்கி விட்டது! இன்று (14-11-2007) வெளியான தினத்தந்தி தினகரன் போன் தமிழ் பத்திரிக்கைகளிலும் மலயால மனோரமா போன்ற மலயால பத்திரிக்கையிலும் அந்த நான்கு சகோதரிகளில் பேட்டிகள் இடம் பெற்றுள்ளது!தினகரன் பத்தரிக்கையில் இன்று (14-11-2007) வெளியான நான்கு சகோதரிகளின் புகைப்பட செய்தி Click Hereதினகரன் பத்தரிக்கையில் இன்று (14-11-2007) வெளியான நான்கு சகோதரிகளின் பேட்டி Click Hereநான்கு சகோதரிகள் நமக்கு அளித்த பேட்டிகேள்வி: நீங்கள் இஸ்லாத்தை ஏற்ற தனால் உங்களுன் பல சலுகைகள் பறிக் கப்படுமே! குறிப்பாக உடைகள் விஷயத் தில் கட்டுப்பாடு ஏற்படுமே! இதுபற்றி உங்களுன் கருத்தென்ன?ஷர்மிளா: இஸ்லாம் கூறும் உடைக் கட்டுப்பாடு என்பது பெண்களின் கற்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும்தான். எனவே இது எங்களுக்கு பாதுகாப்பான விஷயமே. இதை ஒரு கட்டுப்பாடாக நாங்கள் நினைக்கவில்லை.கேள்வி: மிகவும் பிற்படுத்தப்பட்ட எம்பிசி வகுப்பைச் சேர்ந்த நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதால், பிற்படுத்தப்பட்ட பிரிவில்தான் சேர்க்கப்படுவீர்கள். இதனால் உங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் பல சலுகைகள் கிடைக்காதே! இது குறித்து உங்களின் கருத்தென்ன?சகோதரிகள் நால்வரும்: இந்த உலகத்தில் கிடைக்கக்கூடிய சலுகைகள் அற்பமானவை. இவைகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. நாளை மறுமையில் இறைவனின் சன்னிதானத்தில் கிடைக்கும் அந்த மகத் தான சலுகைகளையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஒருங்கிணைந்து கூறினார்கள்.இறைவன் மிகப் பெரியவன்.அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, திருக்குர்ஆன் தமிழாக்கத் தைப் படித்ததற்கே நான்கு சகோதரிகள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இறைவனின் திருமறை கூறும் வழியில் நமது வாழ் வியலை அமைத்துக் கொண்டால், நம்மைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள பல்லாயிரக்கணக்கானோர் தயாராவார்கள். நாம் தயாரா?உலக ஆதாயங்களுக்கு இஸ்லாமிய வழி முறைகளை புறம் தள்ளும் நாம் எங்கே! மறுமை வாழ்விற்காக உலக ஆதாயங்களை புறம் தள்ளும் இவர்கள் எங்கே!! இவர்களின் இந்த பேட்டி நமக்கு ஓர் பாடமாக அமையுமா?தற்போது இந்த நான்கு சகோதரிகளும் TNTJ நடத்தும் பெண்களுக்கான இஸ்லாமிய கல்வி மையத்தில் இஸ்லாமிய கல்வி பயின்று வருகிறார்கள்

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails