அறிவித்தல்: புலிகளின் குரல் வானொலி நிர்வாகம்
அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
எதிர்வரும் மே மாதத்தோடு சிங்கள அரசும் அதற்கு உறுதுணையாகவிருந்த வல்லரசுகளும் எமது தாயக உறவுகள் மேல் கொடும்போர் தொடுத்து நிகழ்த்திய இனப் படுகொலையின் ஓராண்டு நிறைவடைகிறது. மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் என்று தொடர்ந்து, புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என்று நடந்து முடிந்த கோரத்தாண்டவத்தில் கொத்துக் கொத்தாகவும் குடும்பம் குடும்பமாகவும் எமது மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். இன்னொரு புறத்திலே தமிழர் படையின் வீரம் செறிந்த போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அளிவிட முடியாத பெரும் படைப்பலத்துடனும் வல்லாதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடனும் எம்மினத்தைக் காவுகொள்ள வந்த சிங்களப் படையை எமது போராளிகள் தீரமுடன் எதிர்கொண்டு போராடினார்கள். மகத்தான தியாகங்களும் சாதனைகளும் இறுதிநேர யுத்தத்தில் படைக்கப்பட்டன.
இவ்வேளையில், கடந்த ஆண்டு நடந்த இனப்படுகொலையினதும் வீரமிகு போரினதும் பதிவுகளை புலிகளின் குரல் வானொலி தொகுக்க விரும்புகிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பாகவோ வீரமிகு போராட்டம் தொடர்பாகவோ ஆக்கங்கள், ஆவணங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி சாட்சிகளான பலர் இன்று மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தோ அயல்நாடுகளில் தஞ்சமடைந்தோ இருக்கும் நிலையில், அவர்கள் தமது நினைவுப்பகிர்வுகளைப் படைப்புக்களாக்கி புலிகளின் குரல் வானொலிக்கு அனுப்பலாம். புலம்பெயர்ந்த, தமிழக, தாயக உறவுகள் அனைவருமே தங்களது படைப்புக்களை அனுப்பலாம்.
படைப்புக்கள் கதை, கவிதை, சிறுகதை நாடகம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படலாம். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
நன்றி.
புலிகளின் குரல் வானொலி நிர்வாகம்.
--
www.thamilislam.blogspot.com
No comments:
Post a Comment