பெய்ஜிங்: சீன தொலைக்காட்சிகளில் ஆங்கில சுருக்காக்கம் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தை WHO என குறிப்பிடுவதைப் போல பல்வேறு சூழலில் சுருக்கமான ஆங்கில வார்த்தை பிரயோகம் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.
ஆங்கிலம் தவிர்த்து பல்வேறு வேற்று மொழி தொலைக்காட்சிகளும் செய்திகளை வெளியிடும் போது இதுபோன்ற ஆங்கில வார்த்தை சுருக்கங்களை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் இதுபோன்ற ஆங்கில சொல்லாடல்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
சீனா மத்திய தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பெய்ஜிங் தொலைக்காட்சி உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை சீன அரசு அனுப்பியுள்ளது.
தவிர்க்க முடியாத சூழலில், ஆங்கில சுருக்காக்கங்கபளுக்கு இணையான சீன வார்த்தைகளை பயன்படுத்துமாறு ஒளிபரப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிக புழக்கத்தில் உள்ள GDP, WTO, CPI, NBA உள்ளிட்ட சுருக்காக்கங்களை தவிர்த்து அவற்றுக்கு இணையான சீன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியது சீன தொலைக்காட்சிகளுக்கு கட்டாயமாகி உள்ளது.
ஆனால், 'மேற்கத்திய நாடுகள் பல புதிய சைங்கிலீஷ் (சீன ஆங்கில கலப்பு) வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் போது நாமும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து தான் போக வேண்டும்.
இன்றைய தாராளமயமாக்கல் உலகத்தில் இதுபோன்ற வீராப்பு எடுபடாது' என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
No comments:
Post a Comment