பெர்லின் : பயங்கர விஷம் உள்ள பாம்பு ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக, ஜெர்மனி நாட்டின் ஒரு நகர அதிகாரிகள் 65 லட்ச ரூபாய் செலவழித்துள்ளது. சென்ற மாதம் மியூல்ஹெய்ம் என்ற ஜெர்மனி நகரத்தில், ஒரு வீட்டில் ஓர் அடி நீளம் கொண்ட பயங்கர விஷம் உள்ள பாம்பு ஒன்று அதற்கான பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் சுத்தப்படுத்தியபோது, பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பு காணாமல் போனது.
அப்பாம்பால் நகர மக்களுக்கு ஆபத்து என்பதால், நகர அதிகாரிகள் பாம்பைத் தேடி அலைய ஆரம்பித்தனர். அதைப் பிடிப்பதற்குப் பல புதிய கருவிகளைப் பயன்படுத்தினர். அவ்வகையில் அதற்காக 65 லட்ச ரூபாய் வரை செலவழித்தனர். இறுதியில், அந்த வீட்டின் மேற்கூரையில் அந்தப் பாம்பு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment