பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கவிருந்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் வாசற்பகுதியில் 2 முறை பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் 10 பேர் காயமுற்று விட்டதாக கூறப்படுகிறது. சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்ததால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. ஐ.பி.எல்., டுவென்டி -20 போட்டி இன்று மாலை இந்த ஸ்டேடியத்தில் நடக்கவிருந்தது.பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன் அணி மோதுகிறது. மாலை 4 மணி அளவில் துவங்குவதாகயிருந்தது.
சரியாக 3 மணி 20 நிமிடம் அளவில் இந்த ஸ்டேடியத்தின் 12 ம் நம்பர் கேட் நுழைவு பகுதியில் பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. தீப்பிழம்பு கிளம்பியது. அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதில் 10 பேர் காயமுற்றனர். இதில் 3 பேர் போலீசார் ஆவர். இதனையடுத்து இங்கு ஆடத் தயாராக இருந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஓய்வு அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தால் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. வெடி விபத்தா அல்லது பயங்கரவாதிகள் யாரும் நடத்திய சதி வேலையா என இன்னும் போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. ஐ.பி.எல்., போட்டி நடக்கும் இடங்களில் குண்டு வைப்போம் என பயங்கரவாதிகள் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இங்கு இருந்த ஜெனரேட்டர் அறை அருகே இருந்த சுவரில் இருந்து இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரோ திட்டமிட்டு இந்த சதித்திட்டத்தை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டாஸ் வென்றது பெங்களூரு அணி : இன்று நடந்த பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் முடிந்தது. நாட்டு வெடி குண்டாக இருக்குமோ என்று தெரிய வருகிறது. குண்டு குறைந்த சக்தி கொண்டதால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்து விட்டதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் 4 மணி அளவில் துவங்க வேண்டிய போட்டி முக்கால் மணி நேரம் தாமதமாக துவங்கியது. 4. 45 மணி அளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்ததது. போட்டி தாமதமாக துவங்கியதால் 20 ஓவர் 15 ஓவராக குறைக்கப்பட்டது.
--
www.thamilislam.blogspot.com
No comments:
Post a Comment