"டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பிரமுகர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
.
டைம் பத்திரிகை ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்கவர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா மற்றும் மருத்துவர் ராகுல் சிங் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்தில் உள்ளார். மன்மோகன்சிங் 19வது இடத்தில் உள்ளார். இந்தியாவை உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக மன்மோகன்சிங் உயர்த்தி வருவதாக டைம் குறிப்பிட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டி இரட்டை சதம் சாதனையை இந்தியாவே கொண்டாடி மகிழ்ந்ததாக டைம் பத்திரிகை பாராட்டியுள்ளது. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் கொள்கைகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் திட்டங்களுக்கு மையமாக திகழ்வதாக டைம் பத்திரிகை தெரிவிக்கிறது.
source:nakkheeran
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment