போபால் : பட்டமளிப்பு விழாவின் போது அணியப்படும் கவுன், காலனி ஆதிக்கத்தின் காட்டுமிராண்டி தனமான நடவடிக்கை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்திய வன மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், 'நம் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்னும் காலனி ஆதிக்கத்தின் காட்டு மிராண்டி வழக்கமான பட்டமளிப்பு விழா கவுன் (ஆடை) அணிவது தொடர்கிறது. எதற்காக கால்வரையிலான அலங்கார ஆடை அணிய வேண்டும்? பட்டமளிப்பு விழாவின் போது எளிமையான உடை அணியலாமே' என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு அங்கு பட்டமளிப்பு விழா கவுனுடன் வந்தவர்களுக்கு சிறிது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதைப் பொருட்படுத்தாது தான் அணிந்திருந்த கவுனை கழற்றி விட்டு வெள்ளை ஜிப்பா, குர்தாவுடனேயே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ரமேஷ்
source:dinamaalr
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment