Sunday, April 4, 2010

செலவின்றி சாலையோர திருமணம் : கேரள கண்டக்டர் நடத்திய புதுமை

  

 

ஆலப்புழா : ஆடம்பர திருமணங்களை எதிர்க்கும் வகையில், கேரளாவில் கண்டக்டர் ஒருவர், சாலையோரத்தில் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். கேரளாவைச் சேர்ந்தவர் ஓமனக்குட்டன்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அணியில் நிர்வாகியாக இருந்தார். தற்போது பஸ் கண்டக்டராக உள்ளார். ஏராளமான பணத்தைச் செலவழித்து நடத்தப்படும் ஆடம்பர திருமணங்களை கடுமையாக எதிர்ப்பவர். இது குறித்து, மாநிலம் முழுவதும் நடந்து வரும் பிரசாரத்திலும் இவர் பங்கு கொண்டுள்ளார். இவருக்கு ரம்யா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் நடத்தலாம் என, பெற்றோர் முடிவு செய்தனர். ஓமனக்குட்டன் இதை ஏற்க மறுத்துவிட்டார். 'மிகவும் எளிமையாக, சாலையோரத்தில் தான் என் திருமணம் நடக்கும்' என, உறுதியாக தெரிவித்து விட்டார். இதற்கு மணப்பெண் ரம்யாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, ஆலப்புழா அருகில் தொட்டப்பள்ளி என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய பந்தல் அமைக்கப்பட்டு, அதில் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள் என, மிகச் சிலர் மட்டுமே இந்த திருமண விழாவுக்கு அழைக்கப் பட்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு விருந்து எதுவும் அளிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக, எலுமிச்சை பழரசம் தரப்பட்டது. இந்த திருமணம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



source:dinamaalr

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails