சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில், உலகில் முதல் இடத்தைக் கொண்டிருக்கும் பேஸ்புக்(Facebook) இந்தியாவில் தன் அலுவலகத்தை, ஹைதராபாத் நகரில் அமைக்கிறது. இந்தியாவில் இந்த தளத்தைப் பயன்படுத்துபவர்கள், உருவாக்குபவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஏற்பாட்டினை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் இங்கிருக்கும் திறமையுள்ள வல்லுநர்களைத் தங்கள் பணிக்கு இழுக்கவும் முடியும் என திட்டமிடுகிறது. உலகெங்கும் இந்நிறுவனத்திற்கு அலுவலகங்கள் இருப்பதால், தன் வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவை வழங்க இந்நிறுவனத்தால் முடிகிறது.
இந்தியாவில் இந்த தளத்தை மிகச் சுறுசுறுப்பாக 80 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களின் கருத்துக்களை பதிய, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உறவாட, போட்டோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனப் பல பணிகளுக்கு இந்த தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை உலக அளவில் 40 கோடியாகும். இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவில் அமைய இருக்கும் அலுவலகத்தில் பணியாற்ற தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், விற்பனை நிர்வாகிகள் மற்றும் உள்நாட்டு மொழி விற்பன்னர்களை இந்நிறுவனம் விரைவில் பெரிய அளவில் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
source:dinamaalr
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment