மினி எம்பி3 பிளேயர்
கம்ப்யூட்டரில் பாடல்களைக் கேட்க பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவது விண் ஆம்ப் பிளேயர். அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது விண்டோஸ் மீடியா பிளேயர். இருப்பினும் இன்னும் பல தர்ட் பார்ட்டி பிளேயர் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிகவும் எளியதாகவும், சிறப்பாகவும் இயங்கும் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர் எஸ்.டி. பி. பிளேயர் (STPSystem Tray Player).இது 200 கேபி அளவிலான சிறிய எக்ஸ்கியூட் டபிள் பிளேயராகக் கிடைக்கிறது. சிறிய அளவிலான பைலைக் கொண்டிருந்தாலும், இதில் உங்கள் பாடல் பைல்கள் அனைத்தையும் கையாள முடியும். கம்ப்யூட்டரில் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இசையை, பாடலைக் கேட்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இயங்குகிறது.
இந்த பைல் இணையத்தில் இருந்து ஒரு ஸிப் பைலாக இறங்குகிறது. சிறிய பைலாக இருப்பதால், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவில் எந்த இடத்திலும் பதிந்து வைத்து இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், அதன் ஐகான் சிஸ்டம் ட்ரேயில் வந்து அமர்ந்து கொள்கிறது. இதனுடைய செட்டிங்ஸ் அனைத்தும் STP.INI என்ற பைலில் இது தேக்கி வைத்துக் கொள்கிறது. சிஸ் ட்ரே ஐகானைக் கிளிக் செய்து, இதன் அமைப்பை சிறிய பாராக வைத்துக் கொள்ளலாம். அதனை மானிட்டர் ஸ்கிரீனில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கலாம். இதில் ஒரு மியூசிக் பிளேயரில் வழக்கமாகக் காணப்படும் Play, Pause, Stop, Forward மற்றும் Backward பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேலும் பிளே லிஸ்ட், ஈக்குவலைசர், எம்பி3 தகவல்கள், ஆல்பம் தர எனத் தனித் தனி பட்டன்கள் உள்ளன. இவை தவிர சில செயல்பாடுகளுக்கு நாமும் ஹாட் கீகளை செட் செய்து கொள்ளலாம். இதற்கென ஹாட் கீ ஒன்று கீழாகத் தரப்பட்டுள்ளது.
இந்த எஸ்.டி.பி. எம்பி3 பிளேயரைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://stp.byteact.com/
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment