தமிழில் ஜெய்ஹோ பாடல்: ஏ.ஆர்.ரகுமான்
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா வளாகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர் அமீர்கான் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம பூஷன் விருகளும், தொழிலதிபர் வேணுசீனிவாசன், கிரிக்கெட் வீரர் சேவாக் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பத்ம பூஷன் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான், ஜெய் ஹோ இந்திப் பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்துள்ளேன். தமிழ் சிறுவர், சிறுமிகள் ஜெய் ஹோ பாட்டை விழாக்களில் பாடியதை கேட்டு எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. அடுத்த வருடம் ஜெய் ஹோ பாடல் தமிழில் வெளியாகும் என்றார்.
ஸ்லம்டாக் மில்லினர் இந்திப்படம் கடந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார். ஒரு விருது அப்படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஜெய் ஹோ பாடல் உலகமெங்கும் பிரபலமானது
source:nakkheeran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment