வாஷிங்டன்:ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுத போட்டி உருவாகி விடும். எனவே, அந்நாட்டிடம் அணு ஆயுதம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள கடுமையாக உழைத்து வருகிறேன் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.'டிவி' பேட்டி ஒன்றில் அதிபர் ஒபாமா கூறியதாவது:ஈரான், அந்நாட்டு மக்களை ஜனநாயக நடைமுறைப்படி நடக்க விடுவதில்லை. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே, தூதரக அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். அந்நாட்டை வழிக்கு கொண்டு வருவதற்காகத்தான் பொருளாதார தடைகளை விதித்துள்ளோம்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதை, அமெரிக்கா முக்கிய குறிக்கோளாக கருதுகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுத போட்டியை ஏற்படுத்தி விடும். இதனால், நமது தேசிய பாதுகாப்பு நலன் கடுமையாக பாதிக்கும்.ஈரானிடம் அணு ஆயுதம் இருந்து விடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சி எடுத்து வருகிறேன். இதற்காக மற்ற நாடுகளை ஒன்று திரட்டி, ஈரானை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.நண்பர்களுக்கிடையே கருத்து பேதம் இருப்பது போல இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் சில விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும் கூட, நம்முடைய தோழமை நாடாக இஸ்ரேல் உள்ளது.இவ்வாறு ஒபாமா கூறினார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment