புதுடில்லி:நீங்கள் வீடு வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் பில்டரிடம் இருந்து, வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை மறக்காமல் வாங்கி விடுங்கள். இல்லையெனில், அதற்காக கணிசமான தொகையை, சேவை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், மேலும் பல சேவைகளுக்கு, சேவை வரி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.வீடு வாங்குவோர், வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை பில்டரிடம் இருந்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்கவில்லையெனில், அதற்கு சேவை வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்காக, முன்பதிவு செய்தால், அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட பின், பில்டரிடம் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். இல்லையெனில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டுக்கு, மூன்று லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுதவிர, மாநில அரசுகள் விதிக்கும் மதிப்பு கூடுதல் வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, வீடு கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை பெற வேண்டியது மிகவும் அவசியம். மேலும், வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகள், தங்களிடம் கடன் வாங்குபவர், இதற்கு முன் வேறு எந்த வங்கிகளிலும் கடன் வாங்கியுள் ளாரா, அவற்றை முறையாக திருப்பிச் செலுத்தியுள்ளாரா என்பது போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், "இ-லோன் டேட்டா' மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் கடன் வழங்கும் வங்கிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம். கடன் வாங்குபவர், வங்கிகளை ஏமாற்றி முறைகேடு செய்வதை தவிர்ப்பதற்கு இந்த பதிவு முறை பெரிதும் கைகொடுக்கும்.
--
www.thamilislam.co.cc



No comments:
Post a Comment