Saturday, March 6, 2010

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையை கொன்ற தம்பதி

இன்டர்நெட் ஆர்வத்தில் பட்டினி போட்டு குழந்தையை கொன்ற தம்பதி கைது  
இன்டர்நெட் ஆர்வத்தில்    பட்டினி போட்டு குழந்தையை    கொன்ற தம்பதி கைது
தென் கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை இருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்கு சென்று ஆன் லைனில் விளையாடுவார்கள். அவ்வாறு விளையாடும் போது அவர்கள் தங்களையே மறந்து விடுவார்களாம் சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளை கூட மறந்து விடுவது உண்டு.
 
தங்களையே மறந்து விளையாடும் இவர்கள் பெற்ற குழந்தையை மறந்து விட்டனர். அக் குழந்தைக்கு பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். சம்பவத்தன்று ஆன்லைனில் ஆடிய விளையாட்டில் தங்களையே மறந்து விட்டனர்.
 
இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்தது. இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
இதை தொடர்ந்து கவிபோன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால் குழந்தை இறந்தது தெரிய வந்தது.
 
இதை தொடர்ந்து அந்த தம்பதி கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails