Friday, March 5, 2010

விபசார விடுதி நடத்திய போலி சாமியார்; மாணவிகள், விமான பணிப் பெண்கள் ஏமாந்தனர்

டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி நடத்திய போலி சாமியார்; மாணவிகள், விமான பணிப் பெண்கள் ஏமாந்தனர்
 டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி    நடத்திய போலி சாமியார்;    மாணவிகள், விமான பணிப் பெண்கள் ஏமாந்தனர்புதுடெல்லி, மார்ச். 2-
 
டெல்லி கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
 
கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடி இவர் சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம். மிக குறுகிய காலத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல் வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் புகழ் பெற்ற சாமியாராக வலம் வந்தார்.
 
இந்த நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி உண்மையான சாமியார் அல்ல போலி சாமியாரான அவர் மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர்.
 
போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
உடனடியாக போலி சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.
 
இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
 
போலி சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன.
 
அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலம் அவர் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக டெல்லி போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
 
போலி சாமியார் சிவ் முரத்திவேதி இந்த பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்களை இணையத்தளம் மூலம் தேடி கண்டு பிடித்து, அவர்களிடம் பண ஆசை காட்டி விபசார வலையில் தள்ளி உள்ளார்.
 
லட்சக் கணக்கில் பணம் கிடைத்ததால் மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் அவர் விரித்த வலையில் விழுந்து விட்டனர்.
 
சிவ்முரத் திவேதியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்களாக வெளியானபடி உள்ளது.
 
நேற்று நடந்த விசாரணையில் டெல்லியில் 5 இடங்களில் விபசார மையம் வைத்திருந்த தகவலை போலீசாரிடம் சிவ்முரத் திவேதி வெளியிட்டார். டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
 
டெல்லி தவிர தன்னிடம் சிக்கும் பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி சிவ்முரத் திவேதி பணம் சம்பாதித்துள்ளார். இது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
 
விபசார தொழில் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் போலி சாமியார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றையும் போலீசார் முடக்கி வருகிறார்கள்.
 
போலி சாமியாரிடம் விசாரணை நடத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ்முரத் திவேதி பிழைப்பு தேடி 1988ல் டெல்லி சென்றார். ஒரு நட்சத்திர ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்தார். கூலித் தொழிலாளியாகவும் இருந்தார்.
 
குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பாபாவின் சீடர் என்று எல்லோரையும் ஏமாற்றினார். எல்லாரும் நம்பி விட்டதால் அதை வைத்தே விபசார தொழிலில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து நாடெங்கும் சொத்து வாங்கி குவித்து விட்டார்.
 
1997-ல் விபசார தடுப்பு போலீசாரிடம் இவர் சிக்கி தப்பினார். 1998-ல் சொத்து அபகரிப்பு வழக்கிலும் இவர் சிக்கி தப்பினார். தற்போது தான் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails