சுவாமி நித்யானந்தாவின் லீலைகள் :கதவைத் திறந்தால் வருவது யாரோ?: தமிழ் நடிகையுடன் சல்லாபம் நாடு முழுவதும் பக்தர்கள் கொதிப்பு
சென்னை: பத்திரிகை அலுவலகத்துக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். ஃபேக்ஸ், இமெயில் வந்த பிறகு கடிதங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பதிலுக்கு வீடியோ, ஆடியோ சி.டி., டி.வி.டி.க்கள் நிறைய வருகின்றன. சிலவற்றில் சுவையான தகவல்கள், படங்கள் கிடைக்கும். சில குழப்பமான தகவல்களை தாங்கி வந்திருக்கும். நேற்று வந்திருந்த ஒரு சி.டி.யை கம்ப்யூட்டரில் செருகியபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சுவாமி பரமஹம்ச நித்யானந்தா என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக தலைவர், பிரபலமான நடிகையுடன் உல்லாசமாக சல்லாபிக்கும் காட்சிகள் வரிசையாக கம்ப்யூட்டர் திரையில் விரிந்தன. ஆர் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர் அந்த தமிழ் நடிகை. செல்வாக்கு மிகுந்த ஒரு ஆன்மிக தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அவருக்கு வேண்டாத யாரோ செய்த ஒட்டுவேலையாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகம் எழுந்தது. எனவே கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தில் அனுபவம் மிகுந்த நிபுணர்களிடம் சிடியை சோதனை செய்ய கொடுத்தோம். ஒட்டுவேலை அல்ல, அசல் காட்சிகளே சிடியில் பதிவாகியுள்ளது என அவர்கள் அனைவரும் ஊர்ஜிதம் செய்த பிறகே இந்த நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்த தினகரன் தீர்மானித்தது.
நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.
நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக தியானபீடத்தின் வெப்சைட் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா ஒரு தமிழ் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடம் வீடா அல்லது ஆசிரமத்தின் ஓர் அறையா என்பது தெரியவில்லை. நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவதை பார்க்கும்போது இது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார். சி.டி.யில் பதிவாகியுள்ள சில காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக தோன்றுகிறது. அவற்றை ஒதுக்கிவிட்டு சில படங்கள் மட்டும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டமானது.
புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
source:dinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment