Monday, March 15, 2010

டிப்ஸ்... டிப்ஸ்....

 

* ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும். இதனை எப்படி நீக்கலாம். அதுவும் மிகவும் எளிதே. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, எந்த புரோகிராமினை அந்த பட்டியலில் இருந்து மட்டும் நீக்க வேண்டுமோ, அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Remove from this list  என்று இருக்கும் பிரிவில் கிளிக் செய்துவிட்டால் அது நீக்கப்படும். 
* எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந் திருக்கும் பைலை மூடிவிட்டீர்களா! இப்போது மீண்டும் Alt + F4 பயன்படுத்துங்கள். புரோகிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிராமினை மூட வேண்டும் என்றால் அதில் திறந்திருக்கும் ஒவ்வொன்றையும் முதலில் Alt + F4 பயன்படுத்தி மூடிவிட்டு இறுதியாகவும் அதனைப் பயன்படுத்தினாலே புரோகிராம் மூடப்படும்.



வார நாட்கள் மட்டும் வரிசையாக:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் டேட்டாவினை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏதேனும் காலம் ஒன்றில் அடுத்தடுத்த படுக்கை வரிசைகள் உள்ள செல்களில் திங்கள், செவ்வாய், புதன் என வரிசையாக அமைக்க வேண்டும் என்றால், அனைத்தையும் டைப் செய்திட வேண்டியதில்லை. இரண்டு அடுத்தடுத்த செல்களில் "Monday" "Tuesday," என டைப் செய்து, அந்த செல்களைப் பின் தேர்ந்தெடுத்து, ஆட்டோ பில் ஹேண்டிலைப் பயன்படுத்தினால், வாரத்தின் மற்ற நாட்கள் வரிசையாக அமைக்கப்படும். 
ஆனால் உங்களுக்கோ வாரத்தில் உள்ள வேலை நாட்கள் மட்டுமே வேண்டும். சனி, ஞாயிறு("Saturday" and "Sunday,")  தேவையில்லை. அப்படியானால் என்ன செய்திடலாம். எக்ஸெல் இதற்கு வழி வைத்திருக்கிறது. முன்பு கூறியபடி இரண்டு செல்களில் திங்கள், செவ்வாய் டைப் செய்திடவும். அடுத்து ஆட்டோ பில் ஹேண்டிலை மவுஸின் இடதுபட்டனை அழுத்தி இழுக்காமல், வலது பட்டனை அழுத்தி இழுக்கவும். வரிசையாக இழுக்கப்பட்டு வெள்ளிக் கிழமையுடன் நிற்கும். இதில் ரைட் பட்டனிலிருந்து கையை எடுத்துவிட்டால், சிறிய மெனு ஒன்று கிடைக்கும். அந்த மெனுவில்"Fill Days" and "Fill Weekdays." என்ற ஆப்ஷன்ஸ் இருக்கும். Fill Daysதேர்ந்தெடுத்தால் வாரத்தின் அனைத்து நாட்களும் அடுத்தடுத்து நிரப்பப்படும். Fill Weekdaysதேர்ந்தெடுத்தால் வாரத்தின் வேலை நாட்கள் மட்டும் அடுத்தடுத்து நிரப்பப்படும்.



சின்ன சின்ன விளக்கங்கள்
* ரெசல்யூசன் என்ற தொழில் நுட்ப சொல்லை மானிட்டரின் காட்சிக்கும், அச்சுக்கும் பயன்படுத்துகிறோம். எப்படி? இரண்டும் வெவ்வேறு இல்லையா?
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch)  டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதன் மூலம் சொல்லப்படுகிறது.
* டிரைவர் பைல் என்று சொல்கிறோம். இது விண்டோஸ் சிஸ்டத்தைச் சேர்ந்ததா? அல்லது நாம் கம்ப்யூட்டருடன் இணைத்துப் பயன்படுத்தும் (பிரிண்டர் போல) சாதனத்தைச் சேர்ந்ததா?
டிரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் டிரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும். எனவே டிரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails