வீடியோவில் கிராப்பிக்ஸ் நித்தியானந்தா: சிவசேனா தலைவரின் காமெடி பேட்டி
பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், நித்தியானந்தாவின் உருவப்படங்கள் எரிப்பும், ஆசிரமங்கள் சூறையாடுவதும் என நித்தியானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சிவசேனா கட்சித் தலைவர் குமாரராஜா, நித்தியானந்தர் வளர்ச்சியை பிடிக்காமல் சில சக்திகள், கிராப்பிக்ஸ் மூலம் பொய்யான மனிதரை நித்தியானந்தர் போல உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு பகுதிதான் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சி என்று தனது கையில் வைத்திருந்த அறிக்கையை படித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் குமாரராஜா. எந்த ஆதாரத்தை வைத்து வீடியோவில் உள்ள காட்சிகளை கிராப்பிக்ஸ் என்று சொல்லுகிறிர்கள்? இதுபற்றி நித்தியானந்தத்திடம் தொடர்பு கொண்டு பேசினீர்களா? உங்களுக்கும் நித்தியானந்தாவிற்கும் எங்த வகை தொடர்பு? அவரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா? அவருக்கு உங்களை தெரியுமா? இந்து மக்கள் கட்சி உள்பட நித்தியானந்தாவின் பக்தர்களும் இந்த வீடியோ காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அப்படி இருக்க நீங்கள் மட்டும் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்? இது உங்களுடைய விளம்பரத்துக்காகவா? அல்லது அவரோடு உங்களுக்கு வேறு ஒப்பந்தம் உள்ளதா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் காமெடியாக அளித்த ஒரே பதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவின் கிராப்பிக்ஸ் உருவம் என்பதுதான்.
பாதிக்கப்பட்டவர் நித்தியானந்தா, பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காமல் உங்களை ஏன் அனுப்பி வைத்துள்ளார்? ஏன் நித்தியானந்தா தலைமறைவாகி உள்ளார்? அவர் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார்? என்ற கேள்விக்கு, நித்தியானந்தா தலைமறைவாகவில்லை. விரைவில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்திப்பார் என்றார்.
செய்தியாளர்களின் எந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லாமல், முன்னுக்குப் பின் முரணாக பேசிய குமாரராஜாவை, மீண்டும் ஒருமுறை வீடியோவையும், படங்கள் வெளிவந்த புத்தகத்தையும் பார்த்துவிட்டு பின்னர் எங்களை சந்தியுங்கள் என்று சொல்லி விடைப்பெற்றனர் பத்திரிகையாளர்கள்.
source:nakkheeran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment