Friday, March 19, 2010

வேர்ட் டேபிள் டிப்ஸ்

 
 

 வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்பும்படி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U)  கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.
டேபிளை முழுமையாகத் தேர்ந்தெடுக்க
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் அமைக்கப்பட்ட டேபிள் ஒன்றை முழுவதுமாகத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கையில் சில சிக்கல்கள் நேரலாம். டெக்ஸ்ட் மட்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது உள்ளே அமைக்கப்பட்டுள்ள பார்மட்டிங் சமாச்சாரங்கள் கிடைக்காமல் போகலாம். இவற்றைத் தவிர்க்கக் கீழே தந்துள்ள குறிப்பின்படி செயல்படவும். தேர்ந்தெடுக் கப்படவுள்ள டேபிளின் உள்ளாகக் கர்சரை முதலில் நிறுத்தவும். நம் லாக் கீ இயங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும். பின் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு நியூமெரிக் கீ பேடில் 5 என்ற எண் உள்ள கீயை அழுத்தவும். மவுஸ் பயன்படுத்தி டேபிளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டேபிளில் எங்காவது கர்சரை வைத்து மவுஸை இருமுறை கிளிக் செய்திடவும்.
டேபிளை இரண்டாகப் பிரிக்க
டேபிள் ஒன்றை உருவாக்கியபின் அதனைப் பிரிக்க எண்ணுகிறீர்களா? அதனைச் சாதாரணமாகக் கர்சர் கொண்டு சென்று பிரிக்க முயற்சித்தால், குறிப்பிட்ட படுக்கை வரிசை அகலாமவதைத்தான் பார்ப்பீர்கள். அதற்குப் பதிலாக, புதிதாய் அமைக்கப்பட வேண்டும் என விரும்பும் டேபிளில் முதல் வரிசையாய் எந்த வரிசை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரை வைத்துப் பின் டேபிள் மெனு செல்லவும். அங்கு ஸ்பிளிட் டேபிள் என்பதில் கிளிக் செய்திடவும். டேபிள் இப்போது பிரிக்கப்பட்டு தனி டேபிள் ஒன்று காணப்படும்.
சமமான அளவில் டேபிள் செல்கள்
வேர்ட் டேபிள் அமைக்கையில் சமமான அளவில் செல்களை அமைக்க முடியவில்லை என வருந்துகிறீர்களா? ரூலரில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்தால் வித்தியாசமாகவே வருகிறதா? இதற்கான வழியை வேர்ட் தருகிறது. முதலில் உங்கள் டேபிளை, அதன் செல்கள் முன்னே பின்னே இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். இப்போது சம அளவில் அமைக்க வேண்டிய செல்களை முதலில் மனதில் குறித்துக் கொள்ளுங்கள். முதல் செல்லுக்குக் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் மேலே இருக்கும் ரூலரில் தெரியும் செல் பார்டருக்கான சிறிய சதுரத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீயுடன் அழுத்துங்கள். இப்போது அந்த செல்லின் அகலம் எவ்வளவு என்று தெரியும். நீங்கள் செல்லின் அகலத்தைத் தேவையான அளவு வைத்துக் கொண்டு பின் அதே அளவில் இதே முறையில் மற்ற செல்களின் அகலத்தையும் அமைத்துவிடலாமே. இதே போல உயரத்தையும் அமைக்கலாம். 
டேபிள் செல்களில் எண்கள்
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.



இந்த வார இணைய தளம்
உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மக்கள் எல்லாரும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர். எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி சக்தி உள்ளது; கொழுப்புச் சத்து எவ்வளவு, புரோட்டீன் எவ்வளவு என்று அறிய ஆசைப்படுகின்றனர். அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கங்களை வரையறை செய்திடவும் செய்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு உணவுப் பண்டங்களில் இந்த சத்துப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்று அறிய விரும்புகின்றனர்.அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு உணவினைத் தேர்ந்தெடுத்து தங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே "twofoods"  என்ற இணையதளம் இயங்குகிறது. இதில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் காண விரும்பும் இரண்டு உணவுப் பொருட்களை அருகருகே அமைத்து என்டர் செய்தால், அந்த உணவுப் பொருட்களின் சத்து விகிதம் தனித்தனியே காட்டப்பட்டு ஒப்பீடு அட்டவணை கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவில் எவ்வளவு கலோரிகள், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்து உள்ளதாகக் காட்டப்படுகிறது. இதனைக் கொண்டு நாம் நம் உடல்நிலைக்கேற்ப, அல்லது டாக்டரின் ஆலோசனைக்கேற்ப உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஆப்பிள்/ஆரஞ்சு, வெள்ளை / பிரவுண் அரிசி, கோதுமை/அரிசி, கேழ்வரகு /அரிசி என எந்த வகை ஒப்பீட்டிற்கும் பதில் கிடைக்கிறது. இதனைக் காணhttp://www.twofoods.com/  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails