Tuesday, March 2, 2010

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்


 Human Intrest detail news லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது.பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின.


லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வை நடத்தியது.இயற்கை, அறிவியல், வரலாறு, புவியியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சம், மக்கள், முக்கிய இடங்கள் இவை சம்பந்தமாக விஞ்ஞானபூர்வமற்ற முறையில் பொழுதுபோக்கான கேள்விகளை தயாரித்தது.மொத்தம் ஒன்றரை லட்சம் கேள்விகளை தயார் செய்திருந்தது. ஆன்-லைன் மூலம் பதிலளிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தலா 20 வினாடிகள் ஒதுக்கியது.பதிலளித்த ஆண்கள், பெண் இரு பாலரும் மாறி மாறி கூடுதலாகவும் குறைச்சலாகவும் பதிலளித்தனர். முடிவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிக கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர்.



 பெண்கள் 40,88,139 கேள்விகளுக்கும், ஆண்கள் 40,77,596 கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர்.பெண்கள் பொழுதுபோக்கு பிரிவில் 57 சதவீத கேள்விகளும், இயற்கை மற்றும் அறிவியல் பிரிவில் 55 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர்.  மக்கள், முக்கிய இடங்கள் பிரிவில் 42 சதவீத கேள்விகளே சரியான பதிலை அளித்திருந்தனர். ஆண்கள் இயற்கை, பொழுது போக்கு, அறிவியல், விளையாட்டு போன்ற துறையில் சிறப்பாக பதிலளித்திருந்தனர்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails