சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அல்சர் ஆகிய நோய்களை பாகற்காய் கட்டுப்படுத்தும் என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் நோய்இயல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரத்னாராய், மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் பாகற்காயின் பங்கு குறித்து ஆய்வு செய்தார். இதன் முடிவுகள் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கேன்சர் ரிசர்ச் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் சாறு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்ததில் புற்றுநோய்க்கு காரணமான செல்களை கொல்வதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. மேலும் இந்த செல்கள் வளர்ச்சி அடைவதை தடுக்க உதவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கவும், அதன் வேகமான வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும் என ரத்னாராய் தெரிவித்துள்ளார்.
பெண்களை பலி வாங்கும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான இந்த ஆராய்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கொலராடோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியில் துறை தெரிவித்துள்ளது
source:maalaimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment