Wednesday, March 3, 2010

“கல்கி” ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா?வீடியோ

"கல்கி" ஆசிரமத்தில் செக்ஸ் லீலையா? போதை மருந்து கொடுத்து பெண்களை மயக்குவதாக புகார்
 ஐதராபாத், மார்ச். 3-
 
ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.
 
தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
 
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.
 
இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
 
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
 
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
 
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
 
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
 
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
 
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
 
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
 
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
 
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails