கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரே செயலுக்கு இரு வேறு கீ தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். இவற்றில் நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஜோடி கீகளையும் அவற்றிற்கான செயல்பாடுகளையும் இங்கு பார்க்கலாம்.
செய்ததை நீக்க (Undo) – Ctrl +Z,
தேர்ந்தெடுத்ததை நீக்க (Cut) – Ctrl +X
நகலெடுக்க (Copy) – Ctrl +C
எடுத்ததை ஒட்ட Ctrl +V
இந்தச் செயல்களை வேறு சில கீகளை அழுத்தியும் மேற் கொள்ளலாம். அவை:
Ctrl +Z = AltBackspace
Ctrl +X = ShiftDel
Ctrl +C = CtrlIns
Ctrl +V = ShiftIns
அடிக்கோடிட வேர்ட் தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களில் அன்டர்லைன் செய்கையில் சொற்களுக்கு இடையே கோடில்லாமல் சொற்களுக்கு மட்டும் கோடிட Ctrl + Shift + Wஎன்ற கீகளை அழுத்தவும்.
எக்ஸெல் ட்ரான்ஸ்போஸ் பேஸ்டிங்
எக்ஸெல் தொகுப்பில் டேட்டாவினை காப்பி செய்து பேஸ்ட் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. இவற்றை நாம் அறிந்து கொண்டால் நல்ல பயனுள்ள வகையில் இவற்றைப் பயன்படுத்தலாம். பேஸ்டிங் செய்வதற்கான பல வழிகளை முதலில் எங்கிருந்து பெறுவது என்ற கேள்வி எழலாம். இதனை எடிட் (Edit) மெனு சென்று கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் இருந்து பேஸ்ட் ஸ்பெஷல் (Paste Special) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பேஸ்ட் செய்வதற்கான பல வழிகள் காட்டப்படும். இவற்றில் மிகவும் பயனுடையதாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) வசதியைக் கூறலாம். ட்ரான்ஸ்போஸ் என்பது நெட்டு வரிசை செல்களைப் படுக்கை வரிசைகளாகவும் படுக்கை வரிசை செல்களை நெட்டு வரிசையிலும் ஒட்டும். எடுத்துக்காட்டாக B1 முதல் B5 வரை உள்ள செல்களை முதலில் காப்பி செய்கிறீர்கள். பின் உங்கள் கர்சரை ஆ10 ல் வைத்து, எடிட், பேஸ்ட் ஸ்பெஷல் மற்றும் அதன் பின் ட்ரான்ஸ்போஸ் (Edit,Paste Special & Transpose) என்பதைத் தேர்ந்தெடுத்தால், அந்த செல்கள் B10, C10, D10, E10 மற்றும் ஊ10 ஆகியவற்றில் பேஸ்ட் செய்யப்படும். இதே போல படுக்கை வாக்கில் உள்ள செல்களைக் காப்பி செய்து ட்ரான்ஸ்போஸ் செய்தால், செல்கள் நெட்டு வரிசையில் பேஸ்ட் செய்யப்படும்.
பைல் ப்ராப்பர்ட்டீஸ் தகவல் அறிய
பைல் ஒன்றின் அனைத்து தகவல்களும் உங்களுக்குத் தேவை. என்ன வகை பைல்? அதனை எந்த புரோகிராம் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது? அது கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது? அதன் அளவு? எங்கே எப்போது உருவாக்கப்பட்டது? இறுதியாக திருத்தியது என்று? போன்ற தகவல்கள் பைல் ப்ராபர்ட்டீஸ் கட்டத்தில் தெரியும். பொதுவாக இதனைப் பெற, பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து பெறுவோம். இந்த வேலையையும் மிச்சப்படுத்தும் வழி உள்ளது. தேர்ந்தெடுத்த பின்னர், ஆல்ட் + என்டர் கீகளைத் தட்டவும். அல்லது ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, பைல் பெயர் மீது இருமுறை கிளிக் செய்திடலாம்.
வேர்ட் டிப்ஸ்
டாகுமெண்ட் உருவான நாள்
வேர்டில் பல டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். சில வேளைகளில் எந்த நாளில் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தோம் என்று தெரிய வேண்டியதிருக்கும். உருவாக்கிய பின் பலமுறை அதனைப் படித்திருப்போம். பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்போம். இருப்பினும் உருவாக்கிய முதல் நாளைத் தெரிந்து கொண்டால் அதன் அடிப்படையில் பல மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்திருப்போம். எங்கு இந்த தேதி கிடைக்கும்?
வேர்டில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் Insert மெனு கிளிக் செய்து அதில் Field என்பதைத் தேர்ந்தெடுங்கள். இப்போது Field டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Field Names என்று ஒரு பெட்டி இருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லுங்கள். அங்கு Create a Date என்று ஒரு பீல்டு காட்டப்படும். இதனைத் தேர்வு செய்தால் உடன் எந்த பார்மட்டில் தேதி காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்திட பல பார்மட்கள் வரிசையாகக் காட்டப்படும். இதில் கிழமையுடன் கூடிய தேதி பார்மட்டும் இருக்கும். நீங்கள் விரும்பும் பார்மட்டி னைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், அந்த டாகுமெண்ட் உருவாக் கபப்ட்ட முதல் நாள், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் சேர்க்கப்படும்.
No comments:
Post a Comment