ட்ரான்ஸெண்ட் நிறுவனம் கையில் எடுத்துச் சென்று இணைத்துப் பயன்படுத்தக் கூடிய சிடி/டிவிடி ரைட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். மிகவும் ஸ்லிம்மான இந்த போர்ட்டபிள் டிவிடி ரைட்டர், 8எக்ஸ் வேகத்தில் டிவிடியையும், 24 எக்ஸ் வேகத்தில் சிடியையும் இயக்குகிறது. இதனை இயக்குவதற்கு தனியே மின் இணைப்பு வழங்க வேண்டியதில்லை. யு.எஸ்.பி. சக்தியிலேயே இயங்குகிறது.
இந்த ரைட்டருடன் பைல்களை எழுத, சைபர் லிங்க் பவர் டுகோ என்ற சாப்ட்வேர் வழங்கப்படுகிறது. சைபர்லிங்க் தரும் மீடியா �ஷா என்ற சாப்ட்வேர், 30 நாட்களுக்கு சோதனை செய்து பார்க்கத் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதுவது மற்றும் படிப்பதை மேற்கொள்வது மட்டுமின்றி, சிறிய சாப்ட்வேர் இன்டர்பேஸ் ஒன்றின் வழியாக இந்த மீடியா பைல்களை அடுக்கி வைக்கலாம். அண்மையில் பிரபலமான டூயல் லேயர் டிவிடி மீடியா வரையில் அனைத்து பார்மட்களிலும் இது இயங்குகிறது. இரண்டு ஆண்டு வாரண்டியுடன் ரூ.4,300க்குக் கிடைக்கிறது.
கூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை
ஒரு ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எப்படி அறியலாம்? அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம். பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள் நமக்கு உதவுகிறது.
சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத் தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த சுற்று வேலை எல்லாம் வேண்டாம். கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா? Madurai weather என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் கிடைக்கும் திரையில் மதுரையின் அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம் எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம் காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்று காட்டப்படும்.
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment