பின்லேடனை உயிருடன் பிடிக்க முடியாது: அமெரிக்கா
அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை உயிருடன் பிடித்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தும் சாத்தியம் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் எரிக் ஹோல்டர் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி நிலைக் குழுவின் முன், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அரசு தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டர், "ஒன்று அமெரிக்கப் படைகள் ஒசாமா பின் லேடனைக் கொன்றுவிடும் அல்லது அவரது ஆட்களாலேயே அவர் கொல்லப்பட்டுவிடுவார்.
எனவே உயிருடன் ஒசாமாவை நீதிமன்றத்தில் நிறுத்துவது என்பது சாத்தியமல்ல" என்று கூறியுள்ளார்.
ஒசாமாவை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தினால், எந்த ஒரு அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள உரிமைகளை ஒசாமாவும் பயன்படுத்திக் கொள்வார் என்று குடியரசுக் கட்சியினரின் வாதம் அடிப்படையற்றது என்றும் ஹோல்டர் கூறியுள்ளார்.
source:nakkheeran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment