லண்டன்:கம்ப்யூட்டர், டெலிபோன், 'டிவி' என எதை வாங்கினாலும், ஒயர்கள் இணைப்பு தேவைப்படுகிறது; எதிர்காலத்தில் ஒயர்களே இல்லாத இந்த வகை சாதனங்கள் வரப்போகின்றன. பிரிட்டனில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் ஆண்ட்ரூ வைனர் என்பவர் தலைமையில், ஒரு குழு, ஒயர்கள் இல்லாமல் கம்ப்யூட்டர், 'டிவி' கார் போன்றவற்றை இயக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது; இந்த ஆய்வின் இறுதிக்கட்டமாக, ஒயர்களே இல்லாமல், இதுபோன்ற சாதனங்களை இயக்குவதற்கான ஒரு புதிய கையடக்கக் கருவியைக் கண்டுபிடித்துள்ளது.இந்தக் கருவி, மிகவேகமான லேசர் 'பல்ஸ்'களை ரேடியோ அலைகளாக மாற்றும் திறனுடையதாக நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயர்பதிவு (ஹை டெப்னிஷன்) 'டிவி' மற்றும் கணினி , தொலைபேசி போன்றவற்றை ஒயர்கள் இல்லாமலேயே இயக்க முடியும்.சாதாரணமாக, ரேடியோ அலைகள் பிற சக்திவாய்ந்த அலைகளால் பாதிக்கப்படும். ஆனால், இந்தக் கருவி மூலம் மாற்றப்படும் ரேடியோ அலைகள் அவ்விதம் பாதிக்கப்படாத வகையில் மிக நுண்ணியதாக இருக்கும். இதன் மூலம் கார்களின் உட்புறமும் ஒயர்கள் இல்லாமல் இயக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment