உளுந்தூர்பேட்டை, ஏப். 3-
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. இங்கு வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த 9-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வன்னிய கிறிஸ்தவர்கள் பலியாயினர். இதையடுத்து அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு தனி பங்கு உருவாக்க வேண்டும், இல்லாவிட்டால் அனைவரும் இந்து மதத்துக்கு மாறுவோம் என வன்னிய கிறிஸ்தவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லீலா தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து இரு தரப்பு மக்களும் பேராயரை சந்தித்து பேசி மூடப்பட்டுள்ள தேவாலயத்தை திறக்க ஆவன செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே எறையூரில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment