http://tm.dinakaran.co.in/342008/TM_03-04-08_E1_04-05%20CNI.jpg
லண்டன், ஏப். 3-
இரவில் தினமும் எட்டு மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள லாவல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜீன் பிலிப்பி சாபுத் என்ற நிபுணர் தலைமையிலான குழு, இரவில் தூங்குவதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதில், தினமும் தவறாமல் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என்பது தெரிந்தது.
அதே நேரம், 6 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது 9 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்குபவர்களுக்கு எடை அதிகரிப்பதாக தெரிந்தது. ஏழு அல்லது 8 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 2 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக குறைவான நேரமே தூங்கிக் கொண்டிருந்தால் 35 சதவீதம் பேருக்கு சுமார் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தூக்கத்தின்போது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த பின்விளைவுகள் ஏற்படுவதாக பிலிப்பி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment