Tuesday, April 8, 2008

புளியை வைத்து வானிலை அறிக்கை!

சேலம்: "பொங்கும் காலத்தில் புளி காய்க்கும். மங்கும் காலத்தில் மாங்காய் காய்க்கும் என முன்னோர் கூறியுள்ளனர். செழிப்பான காலத்தில் புளியும், வறட்சியான காலத்தில் மாங்காயும் அதிகமாக காய்க்கும் என்பது இதன் பொருள். இந்த ஆண்டு பாலமலையில் மாமரங்களில் வழக்கத்தை விட குறைவாக பிஞ்சு பிடித்துள்ளது. புளி இந்த ஆண்டு கூடுதலாக விளைந்துள்ளது.
எனவே, இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்கின்றனர் மலை கிராம மக்கள். கொளத்துõர் ஒன்றியம் பாலமலையில் உள்ள கடுக்காமரத்துகாடு, தலைக்காடு உட்பட ஏராளமான கிராமங்களில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களிலும் புளி அமோகமாக விளைந்துள்ளது.
பாலமலையில் விளையும் புளிக்கு புளிப்பு சுவை அதிகம் என்பதால் இதன் விலையும் அதிகம்.
ஒரு கூடையில் 15 கிலோ முதல் 18 கிலோ வரை புளி இருக்கும். இது 350 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

http://www.dinamalar.com/Tamilagaserapuseithigal/t5.asp

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails