சென்னை : கண் பார்வையற்றோர், காது கேளாதோர், கை இழந்தோர் போன்ற ஊனமுற்றவர்கள், நடைமுறையில் சகஜமாக பயன்படுத்தக் கூடிய அளவிற்கு பல்வேறு வகையான நவீன கருவிகளை தயாரித்து ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுõரி மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர். "ஸ்மார்ட் கிலவ்': வாய்பேச முடியாத மற்றும் முதியவர்களின் கை அசைவுகளை கொண்டு அவர்களுக்கு முறையாக பேசும் திறனையும், சிரமமின்றி தங்களின் உந்து வண்டியை இயக்கும் திறனையும் இந்த "ஸ்மார்ட் கிலவ்' மூலம் அளிக்க முடியும். இந்த கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் தயாரிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் நல்ல முன்னேற்றத்தை காணும். இந்த கண்டுபிடிப்புக்கள் சிக்கனமாகவும், உபயோகிக்க எளிதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரிமாண கருவி: எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் முருகப்பன், ஸ்ரீஹரி, கார்த்திக், பாலாஜி ஆகிய மாணவர்கள் இரண்டு பரிமாண வடிவங்களை காட்டும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் மூலம் பல வடிவங்களை உருவாக்க முடியும். இதை முப்பரிமாண அமைப்பில் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.
அறுவை சிகிச்சைகளின் போது நமது பரிமாண வடிவத்தை காண முடியும். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த புராஜெக்ட் போட்டியில் இத்துறை மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபாட் செஸ் போர்டு: பார்வையற்றோரும் செஸ் போட்டியில் சாதனை படைக்கலாம் என்ற நோக்கத்தில் ரோபாட் கருவியின் மூலம் சதுரங்கம் விளையாடும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதன் மூலம் "கீ பேட்' உதவியுடன் ஆரம்ப இடத்தையும், சேர வேண்டிய இடத்தையும் கூறிவிட்டால் போதும். செயல்பாடுகள் ரோபாட் உதவியில் நிறைவேற்றப்படும். இதனால் பார்வையற்றோர் வழக்கத்தைவிட சிறப்பான முறையில் செஸ் விளையாட முடியும். "அபோனிக் ஆர்டிகுலேடர்': காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு உதவும் வகையில் "அபோனிக் ஆர்டிகுலேடர்' என்னும் நவீன கருவியை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.



No comments:
Post a Comment