Wednesday, April 2, 2008

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

எஸ். பயாசுதீன்(மொழிபெயர்ப்பு முழுமை அல்ல)

என் பெயர் பயாசுதீன் நான் ஒரு கட்டுக் கோப்பான முஸ்லீம் குடும்பத்தில், தமிழ் நாட்டில் பிறந்தேன். இஸ்லாமின் எல்லா மதச்சடங்குகளும் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ஆறு வயதாக இருந்தபோது என் தகப்பனார் எம். சர்தார் ஹூசைன் காலமானார். இதன் பிறகு நாங்கள் வேறு நகரத்துக்கு சென்று குடியேறினோம். முழுக்குடும்பத்தையும் என் தாயார் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.புதிய இடத்தில் குடியேறின கொஞ்ச நாட்களிலேயே மக்களின் பல்வேறு நிறங்களை கண்டுகொண்டோம். குறிப்பாக எங்கள் உறவினர்கள் உலகத்தில் பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது அதன்பின் ஓடுகிற மக்கள் எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரும் எங்களை விட்டு கடந்து போனபோதும் நாங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஏனென்றால் என் தாயார் செய்வினையால் மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் கொஞ்ச நாட்களில் என்னுடைய சகோதரியையும் பாதித்தது. இந்த நாட்களில் எங்களுக்கு உலகத்தின் ஆவி அல்லது செய்வினைப் பற்றித் தெரியாது எனவே நாங்கள் பெரும் பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், கோவில்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் செலவழித்தோம் ஆனால் ஒரு பயனும் இல்லை.


எங்கள் முழுக்குடும்பமும் மிகுந்த குழப்பத்திற்குள் தவித்தது பல நேரங்களில் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படிநடக்கவில்லை. இதை நான் உங்களுக்கு எழுதும்போதே என் வாழ்க்கையில் இருந்த வெறுமையையும்,நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் மற்றும் என் மேல் இருந்த அன்பு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதம் செய்யும் கரத்தையும் நினைவு கூறுகிறேன். அந்த நாட்கள் பெரும் துயரத்தின் காரிருளினால் மூடப்பட்ட கொடிய நாட்களாய் கடந்தது. அதைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் நாங்கள் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் ஆனால் வாழ்க்கையற்றவர்களாய். 1993 ம் வருடம் என் தாயுடைய நிலைமை மிகவும் மோசமானது இதுதான் பில்லிசூனியத்தின் உச்சக் கூட்டம் என்று அறிந்து கொண்டோம். முழுவதும் உதவியற்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோதும் எங்களுக்கு உதவிசெய்யும்படி இயேசுவின் கரம் இருந்ததை பார்க்க முடிந்தது. கிறிஸ்தவ சபைக்கு போக ஆரம்பித்திருந்த பாண்டி என்ற சகோதரன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் சந்தோஷம், உள்ளத்தில் உள்ள சமாதானம் பற்றியும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் எங்களையும் சபைக்கு அழைத்தார். நாங்கள் ஒரு ஞாயிற்றுக் கிழமை சபைக்கு போனோம் . அந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கினது போல எங்களையும் எல்லா செய்வினை கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கினார். தேவ ஊழியனுடைய ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்து எங்களுடைய எல்லாக் கட்டுகளையும் உடைத்துப் போட்டார், எங்களுடைய சொந்தக் கண்களினால் கண்டு உயிர்த்தெழுந்த அவருடைய உன்னத வல்லமையை உணர்ந்தோம்.


நான் தேவனுடைய வல்லமையை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் இதுதான் முதல்முறையாக எல்லா ஆவிகளும் தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அடிபணிபவதை நான் பார்க்கிறேன். அந்த நபர் செய்வினையை முறிப்பதற்கு எதையும் உபயோகப்படுத்தவில்லை வெறும் வார்த்தைகள் அடங்கிய ஜெபம் மாத்திரம்தான் செய்தார். ஆனால் அந்த வார்த்தைகளில் அத்தனை வல்லமையிருந்தது. அப்போதும் நான் இயேசுவை முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு ஆவிகளின் மீது அதிகாரம் உள்ளது என்று மட்டும் தான் நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சபைக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தப் பிறகு. தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னைத் தேவனோடு இணைக்க கூடிய இயேசுவை என் வாழ்க்கையி;ல் ஏற்றுக்கொண்டேன். மரிக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எனக்குள் உண்டானது தேவ அழைப்பை உணர்ந்து என்னை ஒப்புக்கொடுத்தேன். இறையியல் கல்வியை முடித்துவிட்டு இப்போது ஒரு சிறிய கிராமத்தில் பாஸ்டராக உள்ளேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
 
 
 

S.FAYAZUDDIN

I , S.FAYAZUDDIN born and brought up in a orthodoxy Islamic family in tamil nadu of India. I was taught by all Islamic rituals and ceremonials. My father M.Sardar Hussain passed this world when I was six years old. After his departure our family moved other city and settled there. The whole family was ran after by my mother. As we settled life in this city, soon we came to know about the different colors of the people. Especially about our relatives who taught us to know about the importance of money in this world and the people who are behind it. Even though everyone left us to be alone. We aimed to live a happy and peaceful life as of a human do think. But that too became very hard for us to have. Because my mother was badly affected by the witchcraft which made her physically and mentally so weak. Later it sometimes also affected my sister. During this days, we does not know about the spirit world or Witchcraft. So we spend all our money for hospitals and for many sorcerers, magicians and also for temples. But all left us in vain.

Our family was on so dilemma that we went to suicide as a whole family for many times. But unfortunately it did not happened. When I am writing this I do remember the emptiness in everything and the hopeless condition we had and above all the wonder working hand of loving Savior Jesus Christ. That days went on with tragic sorrows and a gloomy dark covered all over. I would say on those days even though we had our lives in this world but we were life-less. My mother become so severe sick in the year 1993 which was the final move of the witchcraft that we understood. As we were in the hopeless and helpless condition from this world and worldly power. We were able to see the helping hand of Jesus which was above us, since our being in this world. Yes, as we looking our final chapter of the life a Christian brother named Pandi who had started to go to church, shared about his joy and peace in Christ and

 

 

called us to come to church. As we want to see the life. We want to the near by church for a Sunday service. Yes we went near to God who called us. On that Sunday, as Christ resurrected and set free the world, we were also set free from the bondage of the witchcraft. By the prayer of servant of God, Jesus Christ broke all our chains and with our own eyes, we can able to see and feel the magnificent power of resurrected Christ.

As I saw the power of Christ. I was amazed. Because it was for the first time, I have seen that a spirit is subjecting to the high power of God. And also it was for the first time in my whole life I saw that a person is not using anything to remove the witchcraft only a prayer, (the mere words) in which there is power. But still on that time I did not accept Jesus Christ as My personal Savior. Because I accepted Jesus Christ only as God of Power to whom all things are subjected. Later as I began to go to church God's word spoke to me. Yes, I began to look for savior who could wash away my sin, who could make me to have fellowship with God. When I accepted Jesus Christ as My Savior, my inner – being totally become to change and the burden of dying Souls came to me. On a particular Sunday service, I heard the call of God to me for his ministry. By the Grace of God I dedicated to His ministry and able to finish my theological studies and to be in His ministry. I have been pastoring a small village church and reaching Non-Christian Society. I request you pray for the church Ministry and my marriage which will be hell on 09-09-2005 at tamil nadu. All glory be to God.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails