நண்பர் எழில் அவர்களுக்கு ஓர் அழகிய அழைப்பு
நண்பர் எழில் அவர்களுக்கு முதலாவது நண்பர் உமர் அவர்கள் கட்டுரைக்கு நீங்கள் பதிலாக ஒரு கட்டுரை பதித்துள்ளீர்கள்
அதன் பிறகு நான் எழுதிய கட்டுரைக்கும்,என் பதிவில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கும் நீங்கள் பதிலாக இரண்டு பதிவுகளை வெளியிட்டு உள்ளீர்கள்.முதலாவது எத்தனையோ இந்து மத பதிவர்கள் எழுத்துலகில் இருந்தாலும் நீங்கள் பதில் எழுத முன் வந்தது பாராட்டத்தக்கது.சரி நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் நாங்கள் ஆதாரத்தோடு பதில் தருவதற்கு தயார்.
ஆனால் ஒரு சின்ன விஷயம் நாங்களும் இந்து மதத்தின் நான்கு வேதங்கள்,உபநிஷத்கள்,பகவத்கீதை,இராமாயணம்,மஹாபாரதம்,சிவ புராணம்,விஷ்னு புராணம்,கந்த புராணம்,பவிஷ்ய புராணம்,சைவ சித்தாந்தங்கள்,வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தம்,மற்று இருக்கும் இந்துக்களின் அனைத்து புத்தகங்களில் இருந்து நாங்கள் கேள்வி கேட்கிறோம்.அதற்கான பதிலை நீங்கள் தருவதற்கு தயாரா?
உமர் அவர்கள் எழுதிய கட்டுரை
நான் எழுதிய கட்டுரை
எழில் எழுதிய கட்டுரைகள்
மற்றும் நாங்கள் இந்துத்துவம் பற்றி அறிந்துக்கொள்ள எந்த புத்தகங்களை (வேதங்களை) படிக்கவேண்டும் என்பதையும் நீங்கள் தெளிவு படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம்
சிறுகுறிப்பு;இணையத்தில் வரும் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பதிப்பார்கள்.அது நான்கு பேரல்ல நாற்பது பேர் வேண்டுமானாலும் பதிக்கலாம்.அந்த பதிவின் மூலத்தொடுப்பு யாருடையது என்று பாத்தால் தெரிந்துவிடும் கட்டுரையை யார் எழுதினது என்று.இதற்கு போய் நண்பர் எழில் மிகவும் வருத்தம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
No comments:
Post a Comment