ஆம்லெட் பெரிசா?கட்லெட் பெரிசா
ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள்.
இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம்.
ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது.
உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர்.
கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது.
கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது.
உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய்.
கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை என்று சொன்னது.
உடனே மாடு சொன்னது நாம் ஏதாவது இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யலாம என்று கேட்டது.
உடனே கோழி சரி ஆனால் என்ன உதவி செய்வது என்று கேட்டுவிட்டு ஏதோ நினைவு அந்தது போல் தலையை ஆட்டிவிட்டு நான் இந்த குழந்தைகளுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு ஆம்லெட் கொடுத்து விடுகிறேன்.
மாடு ஆப்போ நான் என்ன கொடுக்கிரது?
கோழி சொன்னது நீ இவங்க எல்லோருக்கும் ஒரு கட்லெட் கொடுத்து விடு என்று கூலாக பதில் சொன்னது
மாடு பதில் சொல்லாமல் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது.
என்ன ஒன்னும் புரியவில்லையா?
பின்ன என்னங்க தான் செத்தாத்தான் எல்லா பிள்ளைகளுக்கும் கட்லெட் கொடுக்க முடியும்ன்னு மாட்டுக்கு தெரிஞ்சு போச்சில்ல.!!!!!!!!!!!
No comments:
Post a Comment