Sunday, April 6, 2008

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?

சந்து என்ற ஒன்று இருக்கும்வரை பெண்கள் கற்புள்ளவளாக இருக்க முடியாது என்கிற `பொன்மொழியை' உதிர்த்தவராயிற்றே துரோபதை.
இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?


குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன் புணரலாம் என்று இந்து மத சாத்திரம் கூறவில்லையா?

இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் கதி என்ன? சரஸ்வதியின் அப்பனும் பிரம்மாதான், புருசனும் பிரம்மா தானே?

குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?

கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று இவர்களின் புராணங்கள் கூறவில்லையா?

மாற்றான் மனைவியை மாறுவேடம் பூண்டு கற்பழித்தவன்தானே விஷ்ணு?
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவன்தானே இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவன்.

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?

சண்டை போடாத பகவான் உண்டா?

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனன் ஒருவனுக்கே மோட்சம் அளித்த மதமாயிற்றே!

இந்த யோக்கியதை உடைய மதத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்,

அய்யகோ மத நம்பிக்கையாளர் களின் மனதைப் புண்படுத்துகிறார்களே என்று புலம்புவதில் பொருள் இருக்க முடியுமா?

மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் ஒன்று செய்யலாம்.

இந்து மதப் புராணங்கள், வேதங்கள், உபநிஷத்துகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகிய எல்லா வற்றையும் ஒரே மூட்டையாகக் கட்டி பகிரங்கமாக அறிவித்து, ஒரு பொது இடத்தில் கொளுத்திச் சாம்பலாக்கி அதனை `இந்து மகாசமுத்திரத்தில்' வழித்து எறிய முன்வரட்டுமே, அதுதான் அறிவார்ந்த, ஒழுக்கமான செயலாக இருக்க முடியும்.

 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails