ஹஜ் மானியம் வேண்டாம் பிரதமரிடம் எம்.பி.க்கள் மனு
புதுடெல்லி, ஏப். 11-
ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களவை துணை தலைவர் ரகுமான் கான் தலைமையில் எம்.பிக்கள் குழு ஒன்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஹஜ் சட்டத்தை மாற்றியமைக்கும் படி 5 மாநில ஹஜ் கமிட்டிகளும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இஸ்லாமியர்களின் மத கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் ஹஜ்புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் 300 கோடி ரூபாய் செலவழிக்கிறது. இதற்கு சங்பரிவார் உள்ளிட்ட ஒரு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு மதத்துக்காக அரசு பணத்தை செலவிடுவது தவறு என இந்த அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இது தொடர்பான வழக்கு ஒன்று அலகாபாத் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை ரத்து செய்யுமாறு 5 மாநில ஹஜ் கமிட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாநிலங்களவை தலைவர் ரகுமான் தலைமையில் எம்.பி.க்கள் குழு ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஹஜ் மானியத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஹஜ்மானியத்துக்கு மாற்றாக வேறு வழிமுறைகள் ஆராய்வதற்காக மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்துள்ளார். இந்தக் கமிட்டியின் அறிக்கை கிடைத்தவுடன் ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.
ஹஜ் மானியம் ரத்து குறித்து டெல்லி ஜமா மஸ்ஜித் இமாம் அகமது புகாரி கூறுகையில், Ôஹஜ் யாத்திரை செல்வதற்குரிய வசதி இல்லாதவர்கள் யாத்திரை செல்லவேண்டிய அவசியம் இல்லை என குரானில் சொல்லப்பட்டுள்ளதுÕ என்றார்.
No comments:
Post a Comment