Saturday, April 12, 2008

சந்தனத்தில் பட்டுப்புடவை தயாரித்த தம்பதி: 3 ஆண்டுவரை கம கமக்கும்

 

நகரி, ஏப். 12-

ஆந்திர மாநிலம் அனந்தா புரம் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உஷாராணி. இருவரும் பேஷன் டிசைனிங் படித்து விட்டு சொந்தமாக பட்டுப்புடவை தயாரித்து வருகிறார்கள்.

இவர்களது கற்பனையில் உருவான பட்டுப்புடவை டிசைன்களுக்கு நாடு முழு வதிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும வகையில் இருவரும் சந்தன பட்டுப் புடவை தயாரிக்க திட்ட மிட்டனர்.

இதன்படி அவர்கள் சந்தன வில்லைகளை கல் நகை போல் டிசைன் செய்து பட்டுப்புடவையில் பொருத்தினர்.

சுமார் 400 கிராம் சந்த னத்தை அந்த புடவைக்கு பயன்படுத்தினர். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த சந்தன புடவையை தர்மாவரம் பெண் கள் திரண்டு வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதுபற்றி பேஷன் டிசைனர் உஷாராணி கூறும் போது, சந்தன பட்டுப்புடவையை 7 பேர் சேர்ந்து 15 நாட்களில் தயாரித்தோம்.

இப்புடவையில் 3 ஆண்டு வரை இந்தன வாசனை வீசும்.

இதை உடுத்தும் பெண் கள் வாசனை திரவியம் பயன்படுத்த தேவை இல்லை. இந்த சந்தன வாசனையே போதும். சந்தன பட்டுப் புடவை தயாரிக்க நிறைய செலவாகிறது. இப்புடவைக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்''.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails