Tuesday, April 1, 2008

அகமதாபாத் இளைஞர் 21 வயதில் 215 கிலோ எடை


 http://dkn.dinakaran.co.in/242008/DN_02-04-08_E1_08-06%20CNI.jpg


அகமதாபாத், ஏப்.2: ஓர் இளைஞர் தனது 21 வயதிலேயே 215 கிலோ உடல் எடையுடன் இந்தியாவின் குண்டு மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் இரும்பு வியாபாரியின் மகன் ரோமில் ஷா. பட்டதாரியான இவர் 21 வயதில் 215 கிலோ எடை இருந்தார். அதன் மூலம் இந்தியாவின் குண்டு மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இவருக்கு 10 வயது இருக்கும்போது டைபாய்டு மற்றும் மலேரியா காய்ச்சல் தாக்கியது. அதன் பிறகு தான் ஷாவின் உடல் எடை அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பின் ஆண்டுக்கு 15 கிலோ வீதம் எடை அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 55 கிலோ எடை கூடியது. அதனால் வேறு வழி இல்லாமல் எடையை குறைக்க கடந்த திங்கள்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது.
அவரது வயிற்று பகுதி பத்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது. சிறு குடலின் பெரும் பகுதி வெட்டி எறியப்பட்டது. இப்போது மாதம் 20 கிலோ வீதம் அவரது எடை குறையத் தொடங்கி இருக்கிறது. அதற்காக பெரும்பாலும் திரவ உணவுதான் சாப்பிடுகிறார். இது பற்றி அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் மகேந்திர நர்வாரியா கூறும்போது, "ரோமில் ஷாவின் வயதை பொறுத்தவரை அவரது எடை 75 கிலோதான் இருக்க வேண்டும். ஆனால், 215 கிலோ இருந்தார். இப்போது ஆபரேஷன் செய்து கொண்டதால் இன்னும் ஓர் ஆண்டில் அவரது கூடுதல் எடை குறைந்து விடும். அதே சமயம் அவருக்கு வைட்டமின் போன்ற சத்துக்கள் சரியாக கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails