படிக்கிறதுக்கான வேலையை பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டே, நாங்கள் படித்துவிடாமலிருப்பதற்கான வேலையையும் செய்துவந்திருக்கிறார்கள். அதன் பொருட்டே 'மநுஸ்மிருதி' நாலாஞ்சாதியான என் மூதாதையர்களின் மீது ஏவப்பட்டது. இதில் மநு பாப்பானா இல்லையா என்பதல்ல கேள்வி. அது பார்ப்பனர்களால் உயர்த்திப்பிடிக்கப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி.
ஆம் என்றால் குற்றத்தை ஒப்புக்கொள். இல்லையென்றால் மநுஸ்மிருதியை கொளுத்த என்னுடன் நீவரத்தயாரா என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
கஞ்சிக்கு வழியில்லாவிடாலும் பாப்பான் வேதம் தான் படிக்கவேண்டும், என்னோடு வந்து உடலுழைப்பு செலுத்தமட்டும் முடியாது. காகாசு பெறாத வேதத்த படிச்சி அத வித்து தின்னுகிட்டு கொழுத்துக்கெடந்தான். ஆனால், கஞ்சிக்கில்லாத பாப்பானுக்கு மட்டுமில்லாமல் அவன் குடும்பத்துக்கே சோறுபோட்டவன் யாரு? தன் குடும்பத்தோட அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தாலும் உழைப்பை விற்கத்தெரியாத, எம்பாட்டந்தானே?
எங்கள் கல்விக்கு வேட்டுவைத்துவிட்டு தான் மட்டும் ஏதோ பயின்று விட்டதாக சொல்லிக்கொண்ட பாப்பான், அந்த 'உயர் பதவி'யிலிருந்து கொண்டு என்னத்த பெருசா கிழிச்சான், அவனவன், அவனவன் தொழில செய்யிறானா, அவனவன் வர்ணக்கட்டுக்குள் இருக்கிறானான்னு வேவுபாத்து, மீறுபவனை மன்னனுக்கு போட்டுக்குடுக்குற வேலையத்தான் செஞ்சான். இதுக்குத்தான் அவன் படித்தானா?
நான் உழைத்துக் கொட்டுவதை கைகூசாமல் வாங்கிக்கொண்டு வாய்கூசாமல் ஏப்பம்விட்டு அடுத்தநாள் அதை எந்தலையிலேயே ஏத்திவுடுவ. அது என் தலையிலிருந்து ஓட்டைவழியே முகத்தில் வழிந்தாலும் துடைத்துவிட்டுக்கொண்டு, அதே கையால (எனக்கு தண்ணியும் தான் நீ தரமாட்ட) நீயாபாத்து போடுறத சாப்பிடவேண்டும். இங்கே வெறும் வார்த்தையில் கூட உன்னால் உச்சரிக்கமுடியாமல் இருக்கிற '***' (அதான் *என்று நான் மேலே எழுதியிருந்ததை நீ மொழிபெயர்த்திருந்தியே, அது) அத நான் சத்தம் போடாம அனுபவிக்கனுமா?.
"அதெல்லாம் அந்தக்காலன்டா அம்பி, இப்பயாரு சாதிபாக்குறா?"ன்ற அம்பிக்கு ஒரு தகவல் சொல்லிக்கிறேன். இந்த குஜராத்ன்னு ஒரு மாநிலம் இருக்குது. அங்கே மோடியின்னு ஒருத்தன் முதல்வரா இருக்குறான். அவன் என்னா சொல்றான்னா, ****என்பது பகவானை சந்தோஷப்படுதுற காரியம், காலங்காலமா நீங்கல்லாம் பாகவானை சந்தோஷப்படுத்துறீங்க. அதன் மூலம் நாங்கள் உள்பட மத்த எல்லாரையும் சந்தோஷப்படுதுறீங்க தெரியுமோ'ன்னு அங்குள்ள எம்மக்களப்பாத்து உருகியிருக்குறான். இதுக்கு என்ன சொல்றீங்க.
அதென்ன, குஜராத்துக்கெல்லம் நான் என்ன சொல்லமுடியும்?ன்னு நீ சொல்லமுடியாதே. அதத்தானே இந்தியாவுல இருக்குற ஒரேயொரு 'இந்துராச்சியம்'முன்னு சொல்றானுங்கோ.நீயும் ஒரு இந்துன்னா இந்துராச்சியத்துலயிருக்குற இந்த கேவலத்துக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
பிகு: நான் பிறப்பால் ஒரு இந்துதான். நான் என்ன செய்யறது, அது எந்தப்பில்லை, இதற்காக இன்னொரு முறையெல்லாம் நான் பிறந்து பார்க்கமுடியாது, அதுக்காக ஒம்மூடத்தனங்களையும் வேதங்களையும் ஏத்துக்கவும் முடியாது. நாங்க சத்தியமா பொறக்கும்போது இந்துதான். ஆனா இப்பத்தான் தெரியல. நீயே சொல்லு நாங்கல்லாம் இந்துவா இல்லயான்னு. ஒனக்குத் தெரியலன்னா, இதுக்குன்னே ஒருத்தன் முட்டகண்ண உருட்டிகிட்டு வெட்டியா கெடக்குறான். அவனுக்கு ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுடு சொல்லுவான். அட நாங்கல்லாம் மனுசந்தான்னே உம்பார்ப்பனியம் ஒத்துக்கல்ல, இதுல இந்துவாவது வெங்காயமாவது.
1 comment:
உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?
தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.
கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
OBC முஸ்லிம்கள் - இந்தி
நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!
சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!
தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.
வந்ததா? இல்லை.
இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.
அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.
Post a Comment