Monday, July 26, 2010

அதிர்ச்சிïட்டும் `ஆசைகள்'

வயது குறைந்தவர்களுடன் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் `பெடோபிலியா' எனப்படுவார்கள். 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்தத் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு நிகராக கால்பதித்து விட்டார்கள். கிராமப்புறங்களில்கூட பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்ப தில்லை. அருகில் உள்ள சிறுநகரங்களுக்கு வேலைக்குச் சென்று குடும்பத் திற்காக வருமானம் ஈட்டுகிறார்கள்.



இதனால் பணிக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்வோர், பயணமாகச் செல்பவர்கள் என எல்லோரும் ஒரே நேரத்தில் பயணிப்பதால் வாகனங்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அந்த வேளையில் நெருக்கடியைப் பயன்படுத்தி ஆண்கள், பெண்களை உரசுகிறார்கள். துணிந்தவர்கள் சில்மிஷம் செய்கிறார்கள். இடையில் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்களின் நிலையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு என்ன காரணம்?

ஆணும் பெண்ணும் திருமணவயதில் திருமணம் மூலம் இணைவது இயல்பு. வாய்ப்புகளை உருவாக்கியும், நெருக்கடி போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் சில்மிஷத்தில் ஈடுபடுவது பாலியல் வக்கிரம்.

பாலியலில் இப்படி வழக்கத்துக்கு மாறான முறையில் ஒரு நபருக்கு தூண்டுதல் ஏற்படுவதை `பாராபிலியா' என்று கூறுவார்கள்.

உறவின்போது சிலருக்கு கிளர்ச்சிïட்டும் வார்த்தைகள் (கொச்சையாக) பேசப்பிடிக்கும், கேட்கப்பிடிக்கும். சிலருக்கு கடிக்கப்படுவதும், அடிக்கப்படுவதும், கீறப்படுவதும் பிடிக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவர் ஆடைகளைக் கழற்றும்போது அருகில் இருந்து பார்க்கப் பிடிக்கும். இதெல்லாம் இயல்பானதாகத் தோன்றினாலும், தகுந்த வாய்ப்புகள் அமையாதபோது அவர்களும் பாராபிலியாக்களாக மாறிவிடுவார்கள். இவர்கள்தான் விதவிதமான காம சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள்.

கூட்ட நெரிசலில் சில ஆண்கள் பெண்களிடம் நெருக்கமாக நிற்பார்கள். சூழ்நிலைக்கேற்ப தங்களுடைய உடலை பெண்களின் உடம்பில் தேய்த்து சுகம் பெறுவார்கள். இது `புரோட்டிïரிசம்' எனப்படுகிறது. இவர்கள் பேருந்துகள், ரெயில், சுரங்கப்பாதை, சந்தை என கூட்டம் அதிகமுள்ள இடங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சிலருக்கு உயிரற்ற பொருட்களைப் பார்த்தாலும் உணர்வு தூண்டப்படும். அப்படி உணர்வு தூண்டும் பொருட்களை அவர்கள் சேகரித்து வைத்திருப்பார்கள். இதற்காக பொருட்களை திருடுவதும் உண்டு. இது `பெடிசிசம்' என்று கூறப்படுகிறது.

இத்தகைய பாதிப்பிற்குரிய சிலர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை சேகரித்து வைத்திருப்பார்கள். சிலர் யாரிடம் திருடினோம் என்று பெயர் கூட குறித்து வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் உயிரற்ற பொருட்களான ஓவியம், புகைப்படத்தைப் பார்த்தாலும் கிளர்ச்சி அடைவார்கள்.




படம்: மாடலுக்காக மட்டும்

சிலர் ஆணாக இருந்து கொண்டு பெண்போல செயல்படுவதில் இன்பம் காணுவார்கள். இதை `டிரான்ஸ் வெஸ்டிசம்' என்பார்கள். இவர்கள் பெண்போல உடை அணிந்து கொள்வார்கள், நடைபோடுவார்கள். திருமணமான பிறகுகூட இதை அவர்களால் நிறுத்த முடியாது.

நிர்வாண படங்களைப் பார்த்து ரசிப்பது `வோவேயரிசம்' என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் படங்களைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாழ்விலும் மற்றவர்களை ஒளிந்திருந்து ரசிப்பதை விரும்புவார்கள்.

சிலர் தங்கள் உடலை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். இது `எக்ஸ்பிசினிசம்' என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஆண்களிடையே காணப்படும் பழக்கமாகும். இது ஒருவகை மனநோய். மாடலிங்கில் இருக்கும் ஒரு சில பெண்கள் தங்கள் உடலை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துவதும் இந்த வகை மனநோய் தான்.

தொலைபேசியில் தொந்தரவு செய்வது சிலருக்கு வாடிக்கை. இதில் 3 வகை உள்ளனர். சிலர் தன்னைப் பற்றியும், தான் இன்பம் காண்பதைப் பற்றியும் விவரிப்பார்கள். சிலர் எதிர்முனையில் இருப்பவரை மிரட்டுவார்கள். மூன்றாவது வகையில் பேசுகிறவர், எதிராளியின் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் காய் நகர்த்துவார்கள்.

அடுத்தவருக்கு வலி உண்டாக்கி ரசிக்கும் பழக்கமும் சிலருக்கு இருக்கும். இது `சேடிசம்' எனப்படுகிறது. இந்த பாதிப்பு உடையவர்களை `சேடிஸ்ட்' என்று அழைப்பார்கள். சிலர் தனக்குத்தானே துன்புறுத்தி வலியை உருவாக்கிக் கொள்வார்கள். இது `மாசோசிசம்' என்று கூறப்படுகிறது. இவர்களில் சிலர் தங்களுக்கு இணங்குபவர்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலர் கற்பழிப்பு, சித்ரவதை, கொலை என கொடூரமாக நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.




வயது குறைந்தவர்களுடன் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் `பெடோபிலியா' எனப்படுவார்கள். 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்தத் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் சிறுமிகளுக்கு அறிமுகமில்லாதவர்கள் இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுத்து துன்புறுத்துவது 10 சதவீதமும், குழந்தையின் உறவுக்காரர் இப்படி சேட்டை செய்வது 15 சதவீதமும் நடப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் புகார்கள் வெளிவராததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. இதில் எந்தவகை பாதிப்பு கொண்டவர்களுக்கும் இப்போது சிகிச்சை இருக்கிறது. சிகிச்சை மூலம் அவர்கள் தங்களை சரி செய்து கொள்ள முடியும்.


source:dailythanthi

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails