Monday, July 5, 2010

நக்சல்கள் அழிக்க விமானப்படை தயாராகிறது ; ரகசிய முன்னோட்ட பணிகள் துவங்கியது


ராய்ப்பூர்: நாளுக்கு நாள் பெருகி வரும் நக்சல்கள் தொல்லையை தாங்க முடியாத மத்திய அரசு விமான படையை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நக்சல்கள் பாதிப்பு மாநில அரசுகள் நடவடிக்கையை துவங்கியுள்ளது. நக்சல் தாக்குதலில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 600 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ரூ. 700 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரை குறி வைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய அரசு, ராணுவ நடவடிக்கையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல் பரவலாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் நக்சல்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆதரவு குரலும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட 27 பேரை கொடூரமாக சுட்டு கொன்றனர். மலைகள் மற்றும் மரங்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு உள்துறை அதிகாரிகள் நக்சல் பாதிப்பு மாநிலங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


நக்சல்கள் ஒழிக்க முதல்கட்டமாக விமானப்படையை களம் இறக்கலாம் என தெரிகிறது. விமான படையை பயன்படுத்துவது தொடர்பாக முதலில் எங்கு ஹெலிபேட் தளம் அமைக்க முடியும் என ஆராய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசு உதவியுடன் இந்த பணிகள் துவங்கியிருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நக்சல்கள் இருக்கும் பகுதிகளை வானத்தில் பறந்தபடி நோட்டமிட்டு வருகின்றனர். இதனால் விமானப் படை விரைவில் தனது பணியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source:dinamalar



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails