சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும், நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன், அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட, ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை. இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.
புல்லட் பார்மட் மாற்றம்: வேர்டில் நீங்கள் உருவாக்கிய ஆவணங்களில், புல்லட்களுடன் அல்லது எண்களுடன் பட்டியலை உருவாக்கி அமைத்திருக்கலாம். பின்னர், இந்த பார்மட் தேவையில்லை என்று கருதி, அவற்றை டெக்ஸ்ட்டுடன் சேர்க்க எண்ணலாம். அப்போது இந்த பார்மட்டிங் வகையை எப்படி நீக்குவது? இதற்கு வேர்ட் ஓர் எளிதான வசதியைத் தருகிறது.
1. முதலில் பட்டியலில் உள்ள பார்மட் நீக்க விரும்பும் வரிகளைத் தேர்ந்தெடுங்கள். இவை எண்களுடனோ அல்லது புல்லட்களுடனோ அமைக்கப்பட்டிருக்கலாம்.
2. எண்களுடன் இருந்தால், டூல் பாரில் Numbering என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. புல்லட்களுடன் அமைக்கப்பட்டிருந்தால் டூல் பாரில் Bullets என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, தேவையில்லாததை மட்டும் நீக்கவும். குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கினால், மற்றவற்றின் எண்களை அல்லது புல்லட்களை வேர்ட் தானாகச் சரி செய்து கொள்ளும்.
பல பக்க பிரிண்ட் பிரிவியூ: வேர்ட் பயன்படுத்தும் பலர், டாகுமெண்ட்களை அச்செடுக்கும் முன், பக்கங்கள் எந்த வடிவில் அச்சில் இருக்கும் எனக் கண்ட பின்னரே, அச்செடுக்க முயற்சி எடுப்பார்கள். இதனால் நேரமும் பேப்பரும் வீணாவது தடுக்கப்படுகிறது. இதற்கான டூல்தான் பிரிண்ட் பிரிவியூ. இதனைக் கிளிக் செய்தால், அச்செடுக்கப் படும் பக்கம், அச்சில் எப்படி தோற்றம் அளிக்கும் என்பது காட்டப்படும். இந்த வசதி ஒவ்வொரு பக்கத்திற்காய் இருப்பது போலக் காட்டப்படும். ஆனால் ஒரே நேரத்தில் பல பக்கங்களின் பிரிண்ட் பிரிவியூவினைப் பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பாகும். வேர்ட் 2007க்கு முன் உள்ள வேர்ட் தொகுப்பில், பிரிண்ட் பிரிவியூவைப் பார்த்தால், திரையின் மேல் இரண்டு பட்டன் இருப்பதனைக் காணலாம்.ஒரு பட்டனில் ஒரு பக்க தாள் இருப்பதையும், இன்னொன்றில் நான்கு தாள்கள் அடங்கி இருப்பதனையும் பார்க்கலாம். இந்த நான்கு பக்கங்கள் காட்டப்படும் பட்டன் அருகே இந்த டூல் பல பக்கங்களுக்கானது என்ற டூல் டிப் உள்ளதனைப் பார்க்கலாம்.
வேர்ட் 2007 தொகுப்பில் இதில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திரையின் மேலாக உள்ள இரண்டு பட்டன்களில் ஒன்று ஒரு பக்கத்திற்கும், இன்னொன்று இரண்டு பக்கங்களுக்குமானது என்று காட்டப்படும். அதிக பக்கங்களுக்கான பிரிண்ட் பிரிவியூ வேண்டும் எனில், ஸூம் பட்டனில் கிளிக் செய்து, Many Pages என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இந்த விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்த பின்னர், எத்தனை பக்கங்களுக்கான பிரிண்ட் பிரிவியூவினைக் காண விரும்புகிறீர்கள் என்று நிரப்ப வேண்டும். இதில் காண விரும்பும் பக்கங்கள் எண்ணிக்கை அதிகமானால், காட்டப்படும் பக்கத்தின் அளவு சிறியதாகும். உங்களுடைய வேர்ட் தொகுப்பின் தன்மைக்கேற்ப, 7 x 13 வரையிலான, அதாவது 91 பக்கங்கள், வரை ஒரு திரையில் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் பக்க எண்ணிக்கையில் மவுஸைக் கொண்டு சென்று கிளிக் செய்து, பின் மவுஸை விட்டுவிட வேண்டும். மீண்டும் ஒரு பக்க பிரிண்ட் பிரிவியூ போதும் என எண்ணினால், One Page என்பதைத் தேர்ந்தெடுத்து விட்டுவிட வேண்டும்.
வேர்ட் பார்மட்டிங்: வேர்ட் டாகுமெண்ட்களில், குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு மட்டும் தனியான பார்மட் அமைக்க விரும்பலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சொல்லைத் தனித்துக் காட்ட, அதனை போல்ட் அல்லது சாய்வெழுத்தாகக் காட்ட நாம் ஆசைப்படலாம். இதற்கு அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுத்துப் பின், விருப்பத்திற்கேற்ற ஐகானை (போல்ட்/ இடாலிக்) கிளிக் செய்தோ, அல்லது கண்ட்ரோல் + பி/ஐ அழுத்தியோ பார்மட்டிங் உருவாக்குவோம். இதற்கு அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. அந்த சொல்லில் எங்காவது ஒரு இடத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று வைத்துப் பின், பார்மட்டிங் கீகளை, அல்லது ஐகானை அழுத்தி, பார்மட் செய்திடலாம்.
இன்னொன்று தெரியுமா? இந்த பார்மட்டிங் செய்ததனை நீக்கி, முன்பிருந்த மாறா நிலைக்கு ஒரு சொல்லைக் கொண்டு வர வேண்டும் என்றால், இதே போல கர்சரை வைத்த பின்னர், கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் போதும். சொல் பழைய நிலைக்கு வந்துவிடும்.
இதே போல கர்சரை சொல்லில் வைத்துப் பின்னர், எழுத்தையும் மாற்றலாம். டயலாக் பாக்ஸில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களையும் இதே முறையில் அமல் படுத்தலாம்.
டேபிளை டெக்ஸ்ட்டாக மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை அழகாக உருவாக்கி அதில் டேட்டாக்களையும் டைப் செய்த பின்னர் அதில் உள்ள சொற்களையும் பிற டேட்டா வினையும் டெக்ஸ்ட்டாக கட்டங்கள் ஏதுமின்றி மாற்றலாம். இதற்கு சம்பந்தப்பட்ட டேபிளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் Table மெனுவில் இருந்து Convert என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சப் மெனுவில் "Convert Table to Text" என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்தபின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடினால் டேபிள் டேட்டாக்கள் டெக்ஸ்ட்டாக மாறி இருப்பதனைப் பார்க்கலாம்.
டாகுமெண்ட்கள் அனைத்தையும் ஒரே திரையில் காண: ஒவ்வொரு புதிய டாகுமெண்ட்டும் வேர்டில் தனியான விண்டோவில் திறக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள பைலின் விண்டோ பின்னால் இருக்கும். விண்டோ மெனு சென்றால் பைல்களின் பெயர்களைப் பார்த்து கிளிக் செய்து பெறலாம். இவை டாஸ்க் பாரிலும் காட்டப்படும். அங்கிருந்தும் கிளிக் செய்து பெறலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் Window மெனு சென்று Arrange All என்பதைக் கிளிக் செய்திடுங்கள். மேலும் மாற்றி மாற்றி டாகுமெண்ட்களைக் காண Alt+Tab அழுத்துங்கள்.
நார்மல் டெம்ப்ளேட்: வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.
http://thamilislam.tk
No comments:
Post a Comment