Tuesday, July 6, 2010

புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா?


 
 

வியாபாரத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அல்ல... மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் விளம்பரங்கள் தேவை. சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திய சில விளம்பரங்கள் இவை...

1980-களில் 'Just Say No' என்கிற வார்த்தை அமெரிக்காவில் பட்டிதொட்டி எல்லாம் ஒட்டப்பட்டது. அப்போது நிறைய இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்கள். 'சக நண்பர்கள் போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த மந்திரச் சொல்லை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று விளம்பரப் படுத்தியதில் பலர் பாதை மாறாமல் தப்பித்தார் கள்.

எய்ட்ஸ் எமனாகப் பரவிய நேரத்தில் மும்பையில் 'பல்பீர் பாஷாவுக்கு எய்ட்ஸ் வருமா?' என்ற விளம் பரம் கலக்கி எடுத்தது. அதுவே, தமிழ்நாட்டில் புள்ளிராஜாவாக அவதாரம் எடுத்தது. அதற்கடுத்துப் பல மாநிலங்களில் பல்பீர் பாஷா பல பெயர் தரித்து விழிப்பு உணர்வு கொடுத்தார்.

இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல். 'மரங்களை வெட்டாதீர்கள். இயற்கையைப் பாதுகாப்போம்' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்!


source:vikatan


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails