லண்டன், ஜூலை. 6-
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மார்க்பெல் (48). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்தார். அவரது விலா எலும்பு முறிந்தது. நுரையீரலும் பாதிக்கப்பட்டது.
மண்டை உடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. எனவே, அவர் "கோமா" நிலைக்கு சென்றுவிட்டார். எனவே, டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
கோமா நிலையில் இருந்து எழுப்ப அவருடன் பேச்சு கொடுக்கும்படி மனைவி பிளேரிடம் டாக்டர்கள் தெரி வித்தனர். அவரும் தொடர்ந்து பேசிப்பார்த்தார். பலன் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அவர்களது 10 வயது மகள் ரெபேக்கா புல்லாங்குழல் இசை தேர்வுக்காக பயிற்சி செய்து வந்தாள். அதை அவள் ரெக் கார்டு செய்து வைத்திருந்தாள்.
பொதுவாக, மார்க்பெல்லுக்கு புல்லாங்குழல் இசை மிகவும் பிடிக்கும். எனவே, அந்த இசை கேசட்டை பிளேர் ஓடச் செய்தார். அதில், இருந்து வெளியான புல்லாங்குழல் இசை மார்க் பெல்லை கண்விழிக்க செய்தது.
பின்னர், அவர் குணமாகி வழக்கம்போல் தனது பணியை தொடங்கினார்
source:maalaimalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment