Monday, July 26, 2010

இந்த வார டவுண்லோட்


விண்டோஸ் இயக்கத்தில் ஹாட் கீகள்
விண்டோஸ் இயக்கமும் சரி, அதில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களும் சரி, நமக்கு பல வகையான ஷார்ட் கட் கீகளைத் தருகின்றன. இவை அதிலேயே புரோகிராம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புரோகிராம்களை இயக்க, நாம் விரும்பும் போல்டர்களைத் திறக்க, பாடல் பைலை இயக்கி ரசிக்க என நம் விருப்பப்படி கம்ப்யூட்டரில் செயல்பட ஹாட் ஷார்ட் கட் கீகள் இருந்தால், எப்படி இருக்கும். நினைக்கவே சுகமாகவும் சுவராஸ்யமாகவும் இருக்கிறதா! அப்படி ஹாட் கீகளை அமைக்கும் வழிகளை ஒரு இலவச புரோகிராம் தருகிறது என்றால் வியப்பின் எல்லைக்கே நீங்கள் சென்று விடுவீர்கள், இல்லையா! அதன் பெயர் Clavier. இதனைhttp://utilfr42.free.fr/util/Clavier.php  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கீ போர்டில் உள்ள எந்த கீயையும், விண்டோஸ் கீ உட்பட, பயன்படுத்தி ஹாட் ஷார்ட் கட் கீகளை உருவாக்க உதவுகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி, புரோகிராம்களை இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் + டபிள்யூ கீயினை அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கும்படி அமைக்கலாம். இதே போல எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் அமைக்கலாம். அல்லது ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றை ஒரு ஷார்ட் கட் கீயில் வைத்து, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் கொண்டு வரலாம். உங்கள் இமெயில் அட்ரஸ் மிகப் பெரிதா? சிறியதாகவே இருந்தாலும் @ அடையாளம் எல்லாம் போட்டு என்டர் செய்வது சிரமமாக இருக்கிறதா! அப்படியானல் அதனையும் ஒரு ஹாட் ஷார்ட் கட் கீயில் வைத்துவிடலாம். இவ்வாறு அமைக்கும் ஷார்ட் கட் கீகள் அனைத்து புரோகிராம்களிலும், வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என அனைத்திலும் இயங்கும். 
போல்டர், இமேஜ், பைல், வீடியோ, ஆடியோ பைல் என எதனை இயக்க வேண்டும் என்றாலும், ஹாட் கீ அமைத்துவிடலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கி, இசையை ரசிப்பவரா நீங்கள்! விண்டோஸ் கீ + எம் கீ அல்லது வெறும் எம் கீ மட்டும் அழுத்திக் கூட விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குமாறு அமைக்கலாம். 
உங்களுக்கான ஷார்ட் கட் ஹாட் கீயினை அமைக்க, கிளேவியர் புரோகிராமை இயக்கி, அதில் ஊதா வண்ணத்தில் உள்ள "+" ஐகானைக் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் போல்டருக்கான பாத் (டைரக்டரி வழி) ஐ இதனுடன் இணைக்க வேண்டும். 
நீங்கள் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை அடிக்கடி பயன்படுத்துபவரா! அந்த ஸ்பெஷல் கேரக்டரை ஒரு ஹாட் கீயில் கொண்டு வரலாம். 
கிளேவியர் புரோகிராமில் யு.ஆர்.எல். லான்ச்சர் என்ற ஒரு பிரிவு உள்ளது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தள முகவரிகளை, ஹாட் கீயில் அமைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இணைய தளத்தில் நீங்கள் நிரப்ப வேண்டிய தகவல்களுக்கு ஹாட் கீ அமைத்து வைத்தால், படிவங்களில் விரைவாக தகவல்களை நிரப்பி விடலாம். 
கேப்ஸ் லாக், நம் லாக் மற்றும் ஸ்குரோல் லாக் போன்றவை, விண்டோஸ் இயக்கத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதனயும் கிளேவியர் புரோகிராமில் செட் செய்திடலாம். 
நீங்கள் இவ்வாறு பல ஹாட் கீகளை அமைத்து விட்டால், எந்த கீ தொகுப்பு எதற்கு என்பது மறந்துவிடும் அல்லவா! கிளேவியர் புரோகிராமிலேயே ஒரு பேனல் ஒன்று உருவாக்கி, அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஹாட் கீகளையும் போட்டு வைக்கலாம். நாம் ஒன்றிரண்டு கீகளை மறக்கும் நிலையில் இந்த பேனல்களில் அவற்றைக் காணலாம். அவசியம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது.


 source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails