மொபைல் போன் பழக்கம் வந்த நாள் தொட்டு, அதன் எஸ்.எம்.எஸ். வழியே தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, அனைவரின் அன்றாட உயிர் மூச்சு போல ஆகிவிட்டது. இதனாலேயே மொபைல் சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்., ஒரு பைசா எஸ்.எம்.எஸ். எனப் பலவகையான திட்டங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்டர்நெட் வழியே இலவசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை WAY 2 SMS என்ற இணைய தளம் தருகிறது. இந்த தளத்தின் முகவரி http://wwwb.way2sms.com.
இதனை அணுகி, முதலில் நம் மொபைல் எண், நமக்கான பெயர் மற்றும் இமெயில் முகவரியினைக் கொடுத்துப் பதிந்து கொள்ள வேண்டும். அதன் பின் நாம் கொடுத்த மொபைல் போனுக்கு நம் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட், ஒரு நான்கு இலக்க எண்ணாகத் தரப்படும். நம் இமெயில் முகவரியுடன் இந்த பாஸ்வேர்ட் எண்ணையும் தந்து அக்கவுண்ட்டுக்குள் நுழைய வேண்டும். அங்கு நாம் எஸ்.எம்.எஸ். கொடுக்க விரும்பும் மொபைல் எண்ணையும், எஸ்.எம்.எஸ். மூலம் தரப்படும் செய்தியையும் டைப் செய்து, என்டர் அழுத்தினால், செய்தி குறிப்பிட்ட போனுக்கு அனுப்பப்படும். அதிக பட்சம் 10 விநாடி நேரத்தில் செய்தி அனுப்பப்படும். செய்தி போனை அடையும் போது அதற்கான அடையாளமான அலர்ட் பஸ்ஸர் கொடுக்கப்படும். இதனை நாம் விரும்பும் நபரிடமிருந்து வரும்போது மட்டும் தருமாறு செட் செய்திடலாம். அல்லது எப்போது இந்த அலர்ட் செய்தி வேண்டுமோ அந்த வேளையில் மட்டும் கிடைக்கும்படி செட் செய்திடலாம். மேலும் ஒருவருக்கு இமெயில் அனுப்புகையில் அனுப்பும் தகவலை எஸ்.எம்.எஸ். மூலம் அவருக்கு அனுப்பலாம். அதே தளத்தில் நாம் அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்ப விரும்பும் எண்களையும், அவற்றிற்கான பெயர்களையும், மொபைல் போனில் உள்ள அட்ரஸ் புக் மாதிரி பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நாம் தொடர்ந்து அனுப்ப முயற்சிக்கையில் ஒவ்வொரு முறையும், தொலைபேசி எண்ணையும், பெயரையும் டைப் செய்திடும் வேலைப் பளு குறையும். மேலும் நாம் அனுப்பும் செய்திகளை சேவ் செய்து அனுப்பப்பட்ட செய்திகளாக (Sent SMS) வைத்துக் கொள்ளும். செய்திகளை டைப் செய்து, அவற்றை அனுப்ப வேண்டிய நாள், நேரம் குறித்து சேவ் செய்து வைத்தால், குறிப்பிட்ட நாளில் அனுப்பி வைக்கும்.
மேலும் குறிப்பிட்ட ஒரு மொபைல் போன் எண்ணைத் தந்து அந்த போன் எந்த ஊரில் உள்ளது என்று கேட்டால், சிறிய மேப்புடன், ஊரைக் காட்டும். அந்த போனுக்கான மெயில் சர்வீஸ் தரும் நிறுவனத்தின் பெயரையும் தரும்.
இதே தளத்தில் இந்த வசதியைப் பயன்படுத்தி, குழு ஒன்றுக்கான எஸ்.எம்.எஸ்.செய்தியை அனுப்பலாம். இதே தளத்தில் இருந்தவாறே, உங்கள் ஜிடாக் (GTalk) மற்றும் யாஹூ! மெசஞ்சர் (Yahoo! Messenger) அக்கவுண்ட்களில் சேட் செய்திடலாம். இவ்வாறு எஸ்.எம்.எஸ்., இமெயில் மற்றும் சேட் ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment