கடலூர்:கடலூரில் வேப்ப மரத்தில் சாரை பாம்பும், கிளியும் ஆக்ரோஷமாக சண்டையிட்டதை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் லாரன்ஸ் ரோடு பான்பரி மார்க்கெட் எதிரில் உள்ள வேப்ப மரத்தில் தினமும் ஏராளமான பச்சைக் கிளிகள், பழத்தை உண்பதற்காக வருவது வழக்கம். நேற்று மாலை 3 மணிக்கு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு வேகமாக வேப்பமரத்தில் ஏறி அங்கிருந்த கிளிகளில் ஒன்றை பிடித்து விழுங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அனைத்து கிளிகளும் சேர்ந்து கூட்டமாக சாரை பாம்பிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்டன. ஒவ்வொரு கிளியும் பறந்து, பறந்து பாம்பை தாக்கியது. பாம்பும் விடாமல் கிளிகளிடம் சண்டையிட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இச்சண்டையை வேடிக்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களில் சிலர், பாம்பிற்கு ஐந்து தலை இருப்பதாகக் கூறி வதந்தியை பரப்பினர்.இதனால் அவ்வழியாக வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் என 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மரத்தடியில் கூடியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், லாரன்ஸ் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment